“நான் இங்கு தேடினேன் .நீ அங்கிருந்தாய்” தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
“நான் இங்கு தேடினேன் .நீ அங்கிருந்தாய்”
தேவைக்கு செலவழிப்பவன் புத்திசாலி.”
தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
சிபிஐ மீது அர்த்தமற்ற குற்றச்சாட்டு: சுப்பிரமணிய சுவாமி கண்டனம்
யாரோ ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை மகிழ்விக்க சிபிஐ முயற்சி செய்கிறது என்று சிபிஐ மீது குற்றம் சாட்டிய தயாநிதி மாறனுக்கு சுப்பிரமணிய சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தனது முன்னாள் உதவியாளர் உள்பட மூவர் கைது செய்யப் பட்டதற்கு செய்தியாளர் சந்திப்பு நடத்தி விளக்கம் தர அவருக்கு உரிமை உண்டு. ஆனால், சிபிஐ மீது அர்த்தமற்ற குற்றச்சாட்டை அவர் கூறுகிறார் என்று கண்டனம் தெரிவித்தார் சுவாமி. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அதனை பெரும் அளவில் முறைகேடாக பயன்படுத்தியவர்கள் மாறன் சகோதரர்கள். பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி தான் குற்றமற்றவர் என்ற ரீதியில் தயாநிதி மாறன் சொன்னால் அதை யாரும் நம்பப் போவதில்லை என்றார் சுப்பிரமணியம் சுவாமி. முன்னதாக, பிஎஸ்என்எல் உயர் ரக இணைப்புகள் முறைகேடாக சன் டிவிக்கு எடுக்கப்பட்ட விவகாரத்தில், தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர் மற்றும் சன் டிவி யின் ஊழியர்கள் இருவர் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அது குறித்து இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குற்றம் சாட்டியுள்ளார். யாரோ ஒர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை திருப்திப் படுத்துவதற்காக சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் அடிக்கடி தில்லியிலும், சென்னையிலும் சிபிஐ அதிகாரிகள் அழைத்த போதெல்லாம் சென்று விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார்கள். இப்போது திடீரென்று அவர்களைக் கைது செய்து, சன் டிவிக்கு தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டதாக ஒப்புக் கொள்ளும்படி அடித்து துன்புறுத்தப் பட்டிருக்கிறார்கள். சிபிஐ மூன்றாம் தர நடத்தையை அவர்கள் மீது காட்டியுள்ளது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குற்றம் சாட்டினார் தயாநிதி மாறன்.
யாரோ ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை மகிழ்விக்க சிபிஐ முயற்சி செய்கிறது: தயாநிதி மாறன்
பிஎஸ்என்எல் உயர் ரக இணைப்புகள் முறைகேடாக சன் டிவிக்கு எடுக்கப்பட்ட விவகாரத்தில், தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர் மற்றும் சன் டிவி யின் ஊழியர்கள் இருவர் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அது குறித்து இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குற்றம் சாட்டியுள்ளார். யாரோ ஒர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை திருப்திப் படுத்துவதற்காக சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் அடிக்கடி தில்லியிலும், சென்னையிலும் சிபிஐ அதிகாரிகள் அழைத்த போதெல்லாம் சென்று விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார்கள். இப்போது திடீரென்று அவர்களைக் கைது செய்து, சன் டிவிக்கு தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டதாக ஒப்புக் கொள்ளும்படி அடித்து துன்புறுத்தப் பட்டிருக்கிறார்கள். சிபிஐ மூன்றாம் தர நடத்தையை அவர்கள் மீது காட்டியுள்ளது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குற்றம் சாட்டியுள்ளார் தயாநிதி மாறன்.
முன்னாள் உதவியாளர் கைது: கருணாநிதியுடன் தயாநிதி மாறன் திடீர் சந்திப்பு
சென்னை: தனது முன்னாள் உதவியாளர், சன் டிவி ஊழியர்கள் இருவர் கைது விவகாரத்தை அடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதியை, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இன்று காலை சந்தித்து பேசினார். தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 300க்கும் அதிகமான உயர் வேக தொலைபேசி இணைப்புகளை அவரது சகோதரர் கலாநிதிமாறனின் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், தயாநிதி மாறனின் கூடுதல் தனிச்செயலராக இருந்த வி.கவுதமன், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீசியன் கேஎஸ்.ரவி ஆகியோரை நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், அவர்கள் இன்று சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை, தயாநிதி மாறன் சந்தித்து பேசினார்.
தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர் உள்பட 3 பேர் கைது
சன் டிவிக்கு முறைகேடாக நவீன தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த கெளதமன், சன் டி.வி. ஊழியர்கள் என மூன்று பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சன் டிவிக்கு முறைகேடாக நவீன தொலைபேசி இணைப்பு வழங்கிய வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறார்கள். சன் டிவியின் உயர் பதவிகளில் இருந்தவர்களிடமும் சிபிஐ விசாரித்து வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த வி. கெளதமனை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் புதன்கிழமை இரவு கைது செய்தனர். அவருடன் சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ். கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ். ரவி ஆகியோரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் மூவரும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்படுவர். இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் தயாநிதி மாறன், பிஸ்.எஸ்.என்.எல். முன்னாள் முதன்மைப் பொது மேலாளர் கே. பிரம்மநாதன் உள்ளிட்டோர் பெயர்களை சிபிஐ சேர்த்திருந்தது. சுமார் 323 சக்தி வாய்ந்த பி.எஸ்.என்.எல். இணைப்புகள் சென்னை போட் கிளப் பகுதியில் உள்ள தயாநிதி மாறன் வீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.பின்னர், இந்த இணைப்புகள் சன் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு முறைகேடாக வழங்கப்பட்டன. இந்த இணைப்புகள் சாதாரண இணைப்புகள் இல்லை. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தேவையான சக்தி வாய்ந்த இணைப்புகள் ஆகும். இந்த இணைப்புகளை முறைப்படி பெற வேண்டுமானால் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிவரும். இதனால், முறைகேடாக இந்த இணைப்புகள் சன் தொலைக்காட்சிக்கு பெறப்பட்டதாகக் கருதப்படுகிறது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
நகைக்கடை உரிமையாளர் கொலையில் பொறியாளருக்கு தூக்கு
சென்னை: சென்னை நெற்குன்றத்தில் நகைக் கடை உரிமையாளரைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், ஏரோநாட்டிக் என்ஜினீயருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை நேற்று இந்தத் தீர்ப்பினை வழங்கியது. சென்னை நெற்குன்றம் பகுதியில் அடகுக் கடை நடத்தி வந்த குணாராம் (எ) கணேஷ்(28), கடந்த 2012 ஏப்ரல் 14ல், நகைக் கடையில் தனியாக இருந்தபோது, கடைக்கு வந்த ஒருவர் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளைடித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலை செய்யும்போது கடையில் இருந்த கேமராவில் பதிவான உருவத்தை வைத்து மர்ம நபரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 12.05.2012 அன்று பள்ளிக்கரணைப் பகுதியில் மக்கள் தொகைக் கணக்கு எடுப்பதாகக் கூறி வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர் சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமஜெயம் (எ) அப்பு (24) என்பதும், ஏரோனாட்டிக் பொறியியல் பட்டதாரியான இவர், விமான ஓட்டிக்கான (பைலட்) பயிற்சியும் பெற்றிருந்தது தெரிய வந்தது. மேலும், நெற்குன்றத்தில் நகைக் கடை உரிமையாளர் குணாராமை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததும் ராமஜெயம்தான் என்பதை போலீஸார் விசாரணையில் உறுதி செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு மதுரவாயல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இவ் வழக்கு நீதிபதி மகாலட்சுமி முன்னிலையில் புதன்கிழமை நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் 30 சாட்சியங்கள், 22 ஆவணங்கள், 11 சான்று பொருள்கள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு குற்றங்கள் நிரூபணம் செய்த பின்னர் ராமஜெயம் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்புக் கூறிய நீதிபதி மகாலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட ராமஜெயத்துக்கு தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். “பொறியியல் படிப்பு படித்த ராமஜெயம், தனது அறிவைப் பயன்படுத்தி சமூகத்தில் முன்னேற்றம் அடையாமல், குறுக்கு வழியில் சமூக விரோதச் செயலில் மீண்டும், மீண்டும் ஈடுபட்டு வந்ததால் இவர் வாழத் தகுதியற்றவர் எனக் கருதி இவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பதாக’ நீதிபதி மகாலட்சுமி தனது தீர்ப்பின் போது குறிப்பிட்டார்.
ஆறாம் திணை-2
ஆறாம் திணை-2
நன்றி-மருத்துவர் கு.சிவராமன்-(வலை)
நெல்லையில் ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ஊராட்சி தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமை தாங்கினார். டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு சுகாதார பாரத இயக்கம் மகாத்மா காந்தி தேசிய உறுதி திட்ட பணிகள் குறித்து ஊக்க பயிற்சி வழங்கப்பட்டது. ஊராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள ஊராட்சி தலைவர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது.
கும்பகோணத்து பாப்பான் குட்டையில் விழுந்தான்”
கும்பகோணத்து பாப்பான் குட்டையில் விழுந்தான்”
கல்கி-சிறுகதையின் தேவை
காஞ்சீபுரத்தைச் சேர்ந்த உபயவேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் தனது வேலையாள் குப்பனைக் கூப்பிட்டு, “அடே குப்பா நீ உடனேயே ஸ்ரீபெரும்புதூர் திருவேங்கடாச்சாரி ஸ்வாமி வீட்டுக்கு போய் ‘திருக்குடந்தை நாராயணஸ்வாமி ஐயங்கார் திருக்கோவில் ஆராதனைக்கு போவதற்காக திருக்குளத்திற்கு சென்றபோது திருப்பாசி வழுக்கி விழுந்தார்’ என்று கூறு” என்றார். குப்பனும் ஆகட்டும் சாமி என முண்டாசைத் தலையில் கட்டிக் கொண்டு கிளம்ப ஆயத்தமானான்.
தான் கூறிய வைஷ்ணவ பரிபாஷையை குப்பன் புரிந்து கொண்டானோ இல்லையோ என மயங்கிய உபயவேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் “என்ன குப்பா நான் சொன்னது விளங்கியதா? என்ன சொல்வாய் அங்கே போய்?” என்று கேட்டார். அதற்கு குப்பன் “தெரியாதா சாமி, கும்பகோணத்து பாப்பான் குட்டையில் விழுந்தான்” என்று சொல்வேன் என்றான்.
இதைத்தான் கல்கி சிலாகித்தார். ஒரே நிகழ்ச்சியை ஐயங்கார் சுவாமிகளும் சொன்னார். குப்பனும் சொன்னான். பளீரென நாலே வார்த்தைகளில் கூறிவிட்டான் பாருங்கள். அதுதான் சிறுகதையின் தேவை என்றார் அவர்.

