Home Blog Page 6332

“ஏழைகளின் சிரிப்பில் பெரியவா”

1969132_763012707087106_4352134091554339462_n “ஏழைகளின் சிரிப்பில் பெரியவா” தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

 
செல்வந்தர் ஒருவர் ஸ்வாமிகளை தரிசனம் செய்ய வந்திருந்தார்.“இறைவன் அருளால் எல்லாச் செல்வங்களையும்
பெற்றிருக்கிறேன்.என்னைப் புண்ணியம் செய்தவனாக்கி விட்டார் கடவுள்” என்றபடியே,
பத்து பவுனை ஸ்வாமிகளின் காலடியில் வைத்தார்.
 
“இல்லாதவர்களுக்கு உதவி செய்து அதனால்
கிடைக்கும் புண்ணியத்தைப் பெற்றிருக்காயா?”
என்றார்கள் ஸ்வாமிகள்.
 
பெரியவாளின் கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.
 
அச்சமயம் தன் பெண்ணுடன் ஸ்வாமிகளைத்
தரிசித்தார் ஓர் ஏழை பிராமணன்.“ஸ்வாமி என்னிடம் கல்யாணத்திற்கு பெண்
இருக்கிறது. ஆனால் பொன் கிடையாது.
தாங்கள் தான் கண் திறக்க வேண்டும்” என்றார்.
 
ஸ்வாமிகள்; தன்னருகே நின்ற செல்வந்தரிடம், “ஆம், நீ புண்யம் செய்தவனாகி விட்டாய். நீ கொண்டு
வந்த பவுனை இவரிடம் கொடுத்தால்,கன்னிகா தானம்
செய்து வைத்த புண்ணியம் உனக்கு கிடைக்கும்” 
என்றார்கள்.
 
காரணமும் தானே, காரியமும் தானே என்றாகி
நின்றார்கள் பெரியவா.
 
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
என்பதை உண்மையாக்கி விட்டு சிரித்தபடியே
நின்றது அந்த சாது.

எமதர்மனுக்கே டாட்டா!

0023_zpsf9c90622 தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நடராஜனின் மகளின் திருமணத்திற்கு இன்னும்
இரண்டு நாட்களே இருந்தன. இந்நிலையில்
மாப்பிள்ளையின் சித்தப்பாவிற்கு ஹார்ட் அட்டாக்.
ஐ.சி.யூவில் இருந்தார். இப்போதும் ஏதும் சொல்ல
முடியாது என்றார்கள் டாக்டர்கள்.
 
பெண்ணைப் பெற்றவர்களுக்கு மனக் கலக்கம்.
எவரும் அபசகுனம் என்று ஏதும் கூறாமல்
இருக்க வேண்டும். திருமணம் தடையில்லாமல்
நடைபெற வேண்டுமே என்ற எண்ணமே பிரார்த்தனை.
 
பகவானைத் தஞ்சமடைவதைத் தவிர,இந்நிலையில்
வேறு உபாயம் இல்லை என்று உணர்ந்தனர் அத்தம்பதி.
 
காஞ்சிபுரம் மஹாப் பெரியவாளை தண்டனிட்டு
வணங்கினார்கள். தங்களின் மனக்கலக்கத்தை
தெய்வத்திடம் தெரிவித்தனர்.
 
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
 
“பெண்ணின் திருமணம் குறித்து கவலைப்பட வேண்டாம்
குறித்த முகூர்த்தத்தில் அமோகமாக நடைந்தேறும்”
இது ஸ்வாமிகளின் அருள்வாக்கு.
 
எவராலும் கொடுக்க முடியாத தைரியத்தைத் தந்தது
இத்தெய்வத்தின் வாக்கு.
 
எமதர்மனுக்கே டாட்டா காண்பித்து விட்டு எழுந்து
வந்து விட்டார் சித்தப்பா. மணமக்களை ஆசிர்வதித்து
அட்சதைப் போட்டார்.“தெய்வத்தின் வாக்கு பொய்க்குமோ?

ஸ்ரீரங்கத்தில் ஆசீர்வாதமா? நெப்போலியனா? : பாஜக தீவிர ஆலோசனை

achary சென்னை ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் முன்னாள் செயலாளர் ஆசிர்வாதம் ஆச்சாரியை அக்கட்சி களம் இறக்கலாம் என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர். திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் பார்த்தீபன், மாநில துணைத் தலைவர் சுப்பிரமணி, பா.ஜ.க அரசியல் வியூகக் குழு உறுப்பினரான ஆசிர்வாதம் ஆச்சாரி ஆகியோரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இவர்களில் ஒருவர் தேர்தலில் களம் இறக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆசிர்வாதம் ஆச்சாரி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் முன்னாள் உதவியாளர். இவர் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் ஆ.ராசா மற்றும் கனிமொழிக்கு ஆகியோருக்கு எதிரான முக்கிய அரசுத் தரப்பு சாட்சியாகவும் napoleon1சேர்க்கப்பட்டுள்ளார். திருச்சியைச் சேர்ந்த இவர், சுப்பிரமணிய சாமியின் வழிகாட்டலில் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம் வகுக்கும் குழு உறுப்பினராக உள்ளார். இவரை வேட்பாளராக அறிவிக்கச் செய்ய சுப்பிரமணியன் சுவாமி முயற்சி செய்து வருகிறார். ஆனால் ஆசிர்வாதம் ஆச்சாரியை களம் இறக்குவதில் தமிழக பாரதிய ஜனதா தலைவர்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே பாஜக.,வில் அண்மையில் இணைந்த நடிகர் நெப்போலியனை களம் இறக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவருக்கு வாய்ப்பளித்தால்,. அவரைப் போன்ற மனநிலையில் உள்ள வேற்றுக் கட்சியினரை பாஜக பக்கம் வர வைக்கலாம் என்று சிலர் அழுத்தம் கொடுத்துள்ளனர். இருப்பினும் முடிவு அமித் ஷாவின் கையில் இருப்பதால், பாஜக தரப்பில் விவாதம் சூடாகியுள்ளது.

கால்வாய் வெட்டிய காலிங்கராயருக்கு மரியாதை!

kalingarayar_kongunadu கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பாக காலிங்கராயருக்கு மாலை அணிவித்து மரியாதை.செய்யப்பட்டது. வாய்க்காலில் வரலாறு படைத்த காலிங்கராயரால் வெட்டப்பட்ட காலிங்கராயர் வாய்க்கால் நாட்டுக்கு அர்ப்பணித்த 734-ம் ஆண்டு விழாவையொட்டி கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் G.K.நாகராஜ் காலிங்கராயர் சிலை அமைந்துள்ள ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள வெள்ளோடு கிராமத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பிரதமர் அலுவலகம் பெயரில் போலி இணையதளம்: பணம் வசூலித்தவர் கைது

pradhan-manthri-adarsh-yojana புதுதில்லி பிரதமர் அலுவலக வெப்சைட்டை போலியாக உருவாக்கி பல பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் என்ற பெயரில் போலியாக ஒரு இணையதளம் செயல்பட்டுவருவதாக தில்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த இணையதளத்தில், பிரதான் மந்திரி ஆதர்ஷ் யோஜனா என்ற திட்டத்தின் பெயரை பயன்படுத்தி, இளைஞர்களிடம் நிதி மோசடி நடந்துள்ளதும் போலீசார் கவனத்துக்கு வந்தது. வேலை தேடும் இளைஞர்களைக் கவருவும் வகையில், வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று இந்த வெப்சைட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதை நம்பி வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்போரிடம், முன்பணம் கொடுத்தால்தான் அடுத்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி, பணம் பறித்துள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் இவர்களிடம் பணத்தை செலுத்தி ஏமாந்தது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து, அந்த போலி இணையதளத்தை போலீசார் முடக்கினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவைச் சேர்ந்த சுதிப்தா சட்டர்ஜி என்பவர் அந்த இணையதள உருவாக்கத்தின் மூளையாக செயல்பட்டவர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா காணொளி மூலம் பிரசாரம்: அதிமுக திட்டம்?

jayalalitha ஸ்ரீரங்கம் தொகுதியில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் பேச்சுகளை பதிவு செய்து, காணொளி, எல்சிடி திரைகள் மூலம் தொகுதி மூழுவதும் ஒளிபரப்பு செய்து பிரசாரத்தில் ஈடுபட அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரின் முதல்வர் பதவியும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியும் பறிபோனது. இதன் காரணமாக, ஸ்ரீரங்கத்தில் வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட இயலாத சூழலில், அத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா இருப்பதால், இவ்வாறு திட்டமிட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் உடல் நலம் குன்றியிருந்தபோது அவரது முகத்தையும், இரட்டை விரல்களை உயர்த்திக் காட்டுவதையும், மருத்துவமனையில் அவர் உணவு உண்ணும் காட்சிகளையும் ஊர் ஊராக வீடியோவில் காட்டியே பிரசாரம் செய்தது போல் இம்முறை ஜெயலலிதாவின் பேச்சுகளை திரையிட திட்டமிட்டுள்ளனர்.

கே.ஜே.யேசுதாஸ்-50: ஜன.25ல் பிரமாண்ட நிகழ்ச்சி!

yesudas   தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், விழியே கதை எழுது, செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே…. என்று நம்மை எல்லாம் தாலாட்டியவர், தாலாட்டிக் கொண்டிருப்பவர்இசை மாமேதை ’பத்மபூஷண்’ டாக்டர். கே.ஜே.யேசுதாஸ். திரை இசை, கர்நாடக இசை, பன்மொழிப் பாடல்கள் மட்டுமின்றி தெய்வீகப் பாடல்களாலும் நம்மை எல்லாம்வசீகரித்து ஆட்கொண்ட இவர், 17 மொழிகளில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி மாபெரும் இசை வேள்வியையே நடத்திக் காட்டியிருக்கிறார். சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், பல்வேறு மாநில அரசுகளின்விருதுகளை 43 முறையும்வென்றவர். போகாத நாடில்லை, பாடாத மொழியில்லை, பெறாத விருதில்லை எனும் வகையில் இவரது சாதனை சரித்திரம் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு அள்ள அள்ளக் குறையாத இசைப் புதையலாய் விளங்குகிறது. இத்தகைய ஈடு இணையற்ற மகத்தான பாடகர் ஐந்து சகாப்தங்களை நிறைவு செய்து தனது இசைப் பயணத்தை இன்றளவும் இனிதே தொடர்ந்து கொண்டிருப்பதை கவுரவிக்கும் வகையிலும், ஒரு இசைத் திருவிழாவாகவே போற்றிக் கொண்டாடவும் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை தரங்கிணி, வி ரெக்கார்ட்ஸ், ராஜ் ஈவண்ட்ஸ் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஜனவரி 25ம் தேதி, சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள இந்த வண்ண மயமான நிகழ்ச்சியில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மேலும் முன்னணி திரை நட்சத்திரங்கள் அனைவரும் திரண்டு வந்து தங்களின் அபிமான பாடகரைப்போற்றி கவுரவிக்க உள்ளனர்.

 [su_heading size=”30″ margin=”30″]சங்கீத சாம்ராட் ஜேசுதாஸ் ![/su_heading]

கட்டசேரி ஜோசப் யேசுதாஸ், கேரள மாநிலம் கொச்சியில் 1940ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி பிறந்தவர். இவரது தந்தை அகஸ்டின் ஜோசப், பிரபல பாடகராகவும் மேடை நடிகராகவும் விளங்கியவர். மூத்த மகன் யேசுதாசுக்கு சிறு வயதிலேயே இசைப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார். கர்னாடக இசையின் அடிப்படையான விஷயங்களை தந்தையிடம் இருந்தே கற்றுக் கொண்ட யேசுதாஸ், பின்னர் குஞ்சன் வேலு ஆசான், பி.எக்ஸ்.ஜோசப், சிவராமன் நாயர், ராமகுட்டி பாகவதர், கே.ஆர்.குமாரசாமி, செம்மங்குடி சீனிவாச ஐயர், செம்பை வைத்யநாத பாகவதர், பல்லவி நரசிம்ம ஆச்சாரியா ஆகியோரிடன் இசை பயின்றார். கொச்சி, செயிண்ட் செபாஸ்டியன் உயர்நிலைப்பள்ளி மாணவனாக இருந்தபோதே பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சிறந்த பாடகராக தேர்வு செய்யப்பட்டு பரிசுகளை வென்றார். மாநில அளவிலான இளைஞர் விழாவில் கர்நாடக வாய்ப்பாட்டு பிரிவில் முதல் பரிசு வென்றது, இவரது இசைத் திறனை பெரிய அளவில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. எர்ணாகுளத்தில் 1958ல் நடந்த கேரள கத்தோலிக்க இளைஞர் விழாவில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். பள்ளிப் படிப்பு முடிந்ததும், கொச்சின் அருகே திரிப்புனித்துராவில்உள்ள ஆர்.எல்.வி.மியூசிக் அகடமியில் சேர்ந்து கானபூஷனம் பாடப் பிரிவில் சேர்ந்து பயின்று, சிறந்த மாணவராக டபுள் புரமோஷனுடன் தேர்ச்சி பெற்றார். மேற்படிப்புக்காக, திருவனந்தபுரம் ஸ்ரீ சுவாதித் திருநாள் மியூசிக் அகடமியில் சேர்ந்தவர், குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர முடியாமல்போனது. 1961ல் முதல் முறையாக திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. பிரபல கவிஞர் ஸ்ரீநாராயண குரு எழுதிய ’ஜாதி பேதம் மத துவேஷம் ஏதுமில்லா’ என்ற அந்தப் பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது (படம்: கால்பாடுகள்). அதைத் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன. அனைத்து தரப்பினரையும் தனது கம்பீரமான இனிய குரலால்கவர்ந்திழுத்த யேசுதாஸ், கேரளா மட்டுமில்லால் இந்தியா முழுவது பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக தனது முத்திரையைப் பதித்தார். தமிழ்த் திரைப்படங்களில் எஸ். பாலச்சந்தரின் பொம்மையில் முதன்முதலாக “நீயும்பொம்மை, நானும்பொம்மை” என்ற பாடல் மூலம் அறிமுகமானார். ஆனால் முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது. 1970களில் இந்தித் திரைப் படங்களில் பாடத் துவங்கினார். முதல் இந்தி மொழிப்பாடல் “ஜெய் ஜவான் ஜெய் கிசான்” என்ற திரைப் படத்திற்கு பாடினார். ஆயினும் அவர் பாடி வெளிவந்த முதல் இந்திப் படமாக “சோடிசி பாத்” அமைந்தது. இவற்றைத் தொடர்ந்து பல மொழிப் படங்களில் பல்லாயிரக் கணக்கானப் பாடல்களைப் பாடி பல விருதுகளையும் பெற்றார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், என்.டி.ராமாராவ், அமிதாப், சஞ்சீவ் குமார், சத்யன், பிரேம் நசீர், மம்மூட்டி, மோகன்லால் உள்பட இந்தியாவின் பிரபல நடிகர்கள் பலருக்கும் பாடல்களைப் பாடியுள்ளார். 1968ல் சோவியத் அரசின் அழைப்பின் பேரில் கலாசாரத் தூதராக ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கஜகஸ்தான் வானொலியில் இவர் பாடிய ரஷ்ய மொழிப் பாடல் அந்நாட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. புகழ்பெற்ற லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹால் (2001), சிட்னி ஓபரா ஹவுஸ் (2006) அரங்குகளில் இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பும் இவரைத் தேடி வந்தது. 1965ல் இந்தியா – சீனா இடையே போர் நடந்தபோது, நாடு முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டியவர், டெல்லியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் அதை நேரில் வழங்கி அவரது பாராட்டுகளைப் பெற்றார். தமது திரை வாழ்வில் வெற்றிகரமாக 50 ஆண்டுகளை நிறைவு செய்து இசைப் பயணத்தை தொடர்ந்து வரும் அவர் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய், ரஷ்யன், அரபி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 50,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடி ஈடு இணையற்ற சாதனையாளராக விளங்கி வருகிறார். சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் என்ற வகையில், ஏழு முறை தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளார். மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். 1975 -ல் பத்மஸ்ரீ விருதும் 2002 -ல் பத்மபூஷண் விருதும் பெற்றிருக்கிறார். திரையிசையுடன்,கர்நாடக இசைக்கச்சேரிகள்பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார். அரை நூற்றாண்டுகள் கடந்தும் இந்த கான கந்தர்வனின் இசைப் பணி இனிதே தொடர்கிறது. விருதுகள் மற்றும் பட்டங்கள்

  • கான கந்தர்வன் – 1968, கேரள மகாகவி ஸ்ரீ.ஜி.சங்கர குருப் வழங்கி கவுரவித்தார்.
  • சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகருக்கான கேரள மாநில விருது – 1969 (24 முறை பெற்றுள்ளார். பல்வேறு மாநிலங்கள் சார்பாக மொத்தம் 45 முறை).

  • சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது – 1972, 1973, 1976, 1982, 1987, 1988, 1991.

  • பத்மஸ்ரீ – 1975

  • கலைமாமணி – 1986

  • அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில்டாக்டர்பட்டம் – 1986

  • லதா மங்கேஷ்கர் விருது – 1993

  • தேசிய குடிமகன் விருது – 1994, அன்னை தெரசா வழங்கி கவுரவித்தார்.

  • சங்கீத கலா சிகாமணி – 2002, இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, சென்னை.

  • பத்மபூஷண் – 2002

  • ரஞ்சனி சங்கீத கலா ரத்னா – 2002

  • சப்தகிரி சங்கீத வித்வான்மணி – 2002, ஸ்ரீ தியாகராஜசுவாமி வாரி கோயில்அறக்கட்டளை, திருப்பதி.

  • உடுப்பி ஆஸ்தான வித்வான் – 2002, உடுப்பி ஸ்ரீகிருஷ்ண மடம்சார்பில் வித்யாதீஷ சுவாமிகள் வழங்கினார்.

  • சுவாதி ரத்னம்விருது – 2002, சென்னை மலையாள கிளப்.

  • சங்கீத கலா சுதாகரா – 2002, உடுப்பிஸ்ரீகிருஷ்ணர்கோயில்.

  • கொரம்பயில் அகமது ஹாஜி அறக்கட்டளை விருது – மத நல்லிணக்கத்தை பரப்பியதற்காக – 2003.

  • ஜே.சி.டேனியல்விருது – 2003, மலையாள திரைப்பட பணியில் வாழ்நாள் அர்ப்பணிப்புக்காக, கேரள அரசு வழங்கி கவுரவித்தது.

  • குட்டிகுரா கேலோபோல் விருது – 2004, வனிதா இதழ் சார்பில் வழங்கப்பட்டது.

  • வாழ்நாள் சாதனையாளர் விருது – 2004, பிலிம்பேர் சார்பில், நேரு ஸ்டேடியம் – சென்னை.

  • விஸ்டம்சர்வதேச விருது – 2005

  • வாழ்நாள் சாதனையாளர் விருது – 2005, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், வட இந்திய திரைத்துறை சார்பில்வழங்கப்பட்டது.

  • சிறந்த பின்னணிப்பாடகருக்கான ஆந்திர அரசின்நந்தி விருது – 2006.

  • உதயஷங்கர்நினைவு பிலிம்விருது – 2006, கன்னட சித்ரா சாகித்ய ரத்னா ஸ்ரீஉதயஷங்கர்நினைவு அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

  • கவுரவ உறுப்பினர் அந்தஸ்து – 2008, வான்கூவர் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா, கனடா.

  • பிலிம்பேர்விருது – 2009

  • மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்சார்பில்டாக்டர்பட்டம் – 2009.

  • கேரள சங்கீத நாடக அகடமி விருது – 2010.

  • சிஎன்என் ஐபிஎன் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது – 2011, டெல்லி.

  • பெப்கா அம்ரிதா பிலிம்விருது – 2011

  • ஹரிவராசனம்விருது – 2012, சபரிமலை சந்நிதானம்.

  • லிம்கா சர்வதேச விருது – 2012, ஆண்டின்சிறந்த மனிதராக தேர்வு.

குறிப்பு: 6 மணி நேரத்துக்கும் மேலாகப் பொழியவுள்ள இசை மழையில், திரு.யேசுதாஸ் அவர்களின் காலத்தால் அழியாத இன்னிசை கீதங்கள் நம்மையெல்லாம் நனைத்து மூழ்கடிக்கக் காத்திருக்கின்றன. சங்கீத சங்கமமாய் அமையும் இந்நிகழ்வில் பல்வேறு இசையமைப்பாளர்களும், பின்னணிப்பாடகர்களும், புகழ்பெற்ற இசைக்கலைஞர்களும் இசைத்துப்பாடி கண்களுக்கும் காதுகளுக்கும்விருந்தளிக்க உள்ளனர். தரங்கிணி, வி ரெக்கார்ட்ஸ், ராஜ் ஈவண்ட்ஸ் இணைந்து வழங்கும் இந்த இசை விழா, இந்த 2015-ம் வருடம் ஜனவரி 10ம் தேதி அன்று 75வது பிறந்தநாள் காணும் திரு.யேசுதாஸ் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமாகவும் அமைய பெறுவதில் பெருமை கொள்கிறோம். இந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது. நுழைவுச்சீட்டுகள் கண்கவர் விதமாகவும், புதுமையாகவும் பல வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளது. ரசிகர்களின் வசதிக்காக அனுமதி சீட்டுகள் லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ் – வடபழநி /எம் 6 ஈவண்ட்ஸ் – சி.ஐ.டி நகர், நந்தி சிலை அருகில் / நாயுடு ஹால் – அனைத்து கிளைகள். மேலும் விவரங்களுக்கு: 99419 22322, 98419 07711, 88070 44521, 044 – 4286 7778. இணையதளம் மூலமாக (Online Ticket Booking) டிக்கெட் முன்பதிவு செய்யவும்

கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலம் டிக்கெட்டுகளைப் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ள்து
www.lakshmansruthi.com,

www.ticketnew.com, www.bookmyshow.com, www.madrasevents.in, www.indianstage.in , www.meraevents.com, www.eventjini.com

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: தொடக்க நாளில் மனுதாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்

srirangam_temple ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்றே, அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.வளர்மதி வேட்புமனு தாக்கல் செய்தார். ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் காதர்மொய்தீனிடம் தனது வேட்பு மனுவை அவர் அளித்தார். வரும் 27-ஆம் தேதி, வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதற்கு மறுநாள் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை திரும்பப் பெற 30-ஆம் தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 13-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 16-ஆம் தேதியும் நடைபெறுகின்றன. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு தண்டனை பெற்றதை அடுத்து, முதலமைச்சர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் ஜெயலலிதா இழந்தார். இதையடுத்து, ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திருச்சி- திண்டுக்கல் சாலையிலுள்ள ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் (தேர்தல் நடத்தும் அலுவலரிடம்) அல்லது திருவானைக்கா டிரங்க் சாலையிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்திலும் (உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம்) வேட்பு மனுக்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளருடன் எத்தனை வாகனங்கள் வந்தாலும் வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதிக்கு 100 மீட்டர் முன்னதாக அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு 3 வாகனங்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படும். அலுவலகத்திற்குள் 1 வாகனம் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படும். அதேபோல் வேட்புமனு கொடுக்கும் அறையில் வேட்பாளருடன் 4 பேர் என ஒரு கட்சிக்கு 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் துவங்குவதையொட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் 70 போலீசாரும், ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் 150 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் பெறுகிறது மெட்ராஸ் ஹைகோர்ட்

madras-high-court புதுதில்லி மெட்ராஸ் மற்றும் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் பெயர்கள் விரைவில் மாற்றப்பட்டு அந்தந்த நகரங்களின் பெயரிலேயே அழைப்பதற்கான மசோதாவை மத்திய சட்ட அமைச்சகம் தயாரித்து வருகிறது. இதன்படி, மெட்ராஸ் ஹைகோர்ட் பெயரும் சென்னை உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் பெறுகிறது. இங்கிலாந்து ராணி எலிசபெத் காலத்தில் இந்திய உயர்நீதிமன்றங்களின் சட்டம் 1861-ன் கீழ் அப்போதைய கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் பம்பாய் நகரங்களில் உயர்நீதிமன்றங்களை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த பகுதிகளில் அந்தந்த நகரங்களின் பெயர்களிலேயே உயர்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. மகாராஷ்டிரா தலைநகர் பம்பாயில், ‘பம்பாய் உயர்நீதிமன்ற’ 1862-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந் தேதி திறக்கப்பட்டது. தற்போது இந்த ஐகோர்ட்டுக்கு நாக்பூர், அவுரங்காபாத், கோவா ஆகிய 3 கிளைகள் உள்ளன. இதன் தொடர்ச்சியாக தமிழக தலைநகரான அந்நாளைய மெட்ராசில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் நிறுவப்பட்டது. இதன் ஒரே கிளையாக மதுரை உயர்நீதிமன்ற கிளை இயங்கி வருகிறது. மெட்ராஸ் உயர்நீதிமன்ற தமிழில் சென்னை உயர்நீதிமன்றம் என்று அழைக்கப்பட்ட போதிலும், ஆங்கிலத்தில் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரே உள்ளது. முன்னதாக கல்கத்தாவில் 1862-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 1995-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில அரசு பம்பாய் நகரின் பெயரை ‘மும்பை’ என மாற்றியது. இதைப்போல தமிழகத்திலும் மெட்ராஸ் என்ற பெயர், ‘சென்னை’ என மாற்றப்பட்டது. ஆனால் இந்த மாநிலங்களில் பழைய பெயரிலேயே இயங்கும் குறிப்பிட்ட சில நிறுவனங்களில், இந்த உயர்நீதிமன்றங்களும் அடங்கும். எனவே இந்த உயர்நீதிமன்றங்களின் பெயர்களையும், தற்போதைய நகர பெயரிலேயே மாற்ற வேண்டும் என அந்தந்த மாநில அரசுகள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளன. அதன்படி இந்த உயர்நீதிமன்றங்களின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்றை நிறைவேற்ற மத்திய சட்ட அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான மசோதா தயாரிப்பு நடவடிக்கைகளில் சட்ட அமைச்சகம் தற்போது ஈடுபட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் மெட்ராஸ் உயர்நீதிமன்றம், விரைவில் சென்னை உயர்நீதிமன்றம் என்ற பெயரில் இனி அழைக்கப்படவுள்ளது.    

அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக நாளை நீர் திறப்பு

panneerselvam சென்னை அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக நாளை நீர் திறந்துவிடப் படுகிறது. இதனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு 20.1.2015 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது. இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.