Home Blog Page 6335

கேரள வனப் பகுதியில் சிறப்பு அனுமதியுடன் உறுமீன் படப்பிடிப்பு!

Urumeen-movie ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி.டி.டில்லிபாபு தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் உறுமீன். இதில் ஜிகர்தண்டா படத்தில் நடித்த பாபி சிம்ஹா நாயகனாகவும், மெட்ராஸ் படத்தில் நடித்த கலையரசன் வில்லனாகவும் நடிக்கின்றனர். படத்தின் நாயகியாக ரேஷ்மி மேனன் நடிக்கிறார். அப்புக்குட்டி, காளிவெங்க, மனோபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சக்திவேல் பெருமாள்சாமி இயக்க, அச்சு இசையமைக்க, ரவீந்திரநாத் குரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு வேலைகள் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், படத்தை மே மாதம் திரையிடத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னர், படத்தின் டிரைலர் ஜனவரி மாத இறுதியில் வெளியிடவுள்ளனர். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி கேரளா, பாண்டிச்சேரி, மியான்மர் என பல இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இரண்டு வித்தியாசமான கதைக் களனில் பயணிக்கும் திரைக்கதை இன்றைய பொருளாதார பின்னணியை மையமாகக் கொண்டது. அண்மையில் இப்படத்தின் உச்சக்கட்ட காட்சி கேரளாவின் அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டது. இதற்குமுன் இத்தகைய இடங்களில் படப்பிடிப்பு நடத்த யாருக்கும் அனுமதி கிடைத்ததில்லையாம்!

தனுஷ் படத்துக்கு புதிய சிக்கல்!

anegan ]நடிகர் தனுஷ் நடித்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் படம் ‘அனேகன்’. வரும் பிப்.13ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் தனுஷ் நான்கு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று சலவைத் தொழிலாளி கதாபாத்திரம். இந்தப் படத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் எனவே, படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் சலவைத் தொழிலாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மதுரை வண்டியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சாலின்மணி, கே.கே.நகர் வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள் மதுரை மாநகர போலீஸ் ஆணையர் சஞ்சய் மாத்தூரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில்… கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த படத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே அந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட தடை விதிக்க வேண்டும். படத்தில் இழிவு வசனங்கள் இடம்பெறச் செய்த இயக்குனர் கே.வி.ஆனந்த், அதை பேசி நடித்த நடிகர்கள் ஜெகன், தனுஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்று குறிபிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் சஞ்சய் மாத்தூர் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெய்யின் நேரம் தவறாமை மிகவும் பிடிக்கும்: புகழ் படத் தயாரிப்பாளர்

Jai-Photo நடிகர் ஜெய் தற்போது வலியவன், புகழ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் புகழ் படத்தை மணிமாறன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே என்எச்4 என்ற படத்தை இயக்கியவர். பிலிம் டிபார்ட்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சுஷாந்த் பிரசாத் படத்தை தயாரித்து வருகிறார். ஒரு தயாரிப்பாளர் தன் படத்தில் நடிக்கும் கதாநாயகனை பாராட்டுவது அரிதாகி வரும் இந்தக் காலகட்டத்தில் சுஷாந்த் பிரசாத், படத்துக்கு ஜெய் தரும் ஒத்துழைப்பைப் பாராட்டி மாய்ந்துதான் போகிறார். ‘ஜெய்யின் நல்ல கதைக்கான தேடல், நேரம் தவறாமை, எளிமை ஆகியவை என்னை மிகவும் கவர்ந்த குணங்கள். அவர் தயாரிபாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ‘வடகறி’ படத்தை தொடர்ந்து நாங்கள் அவரோடு இணைவது இது இரண்டாவது படம். வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்ற ‘வடகறி’ ஒரு நகைசுவை கலந்த த்ரில்லர் படம். ‘புகழ்’ பெயருக்கேற்றபடி வெற்றிப் படமாக அமையும். என்எச்4 படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் அவருக்கு ஒரு முக்கியப் படமாக இருக்கும். இந்தப் படம் பெரிய அளவில் பேசப்பட்டு புகழ்பெற நாங்கள் எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறோம். ரேடியன்ஸ் மீடியா வருண் மணியனோடு இணைந்து இந்தப் படத்தை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் ‘ என்று கூறியுள்ளார் சுஷாந்த். பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமானவர் ஜெய். இவர், சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ஜெய் நடிக்கும் வலியவன்

f28286a70f7365a12aab82845edb42ee - 2026 Valiyavan Press Meet Stills (12) ஜெய், ஆண்டிரியா, அளகம்பெருமாள் ஆகியோர் நடிப்பில் உருவாகிறது வலியவன். இந்தப் படத்தில் ஆரோன் சௌத்ரி அறிமுகமாகிறார். பால சரவணன், அனுபம் குமார் ஆகியோர் உடன் நடித்திருக்கிறார்கள். சரவணன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில் இந்தப் படம் வருகிறது. சிவா, சில்வா ஆகியோர் சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கின்றார்கள். நா.முத்துக்குமார், விவேகா ஆகியோர் படத்துக்கான பாடல்களை எழுதியுள்ளனர்.

புகைப்படங்கள்

[su_button url=”https://www.dhinasari.com/cinema/” background=”#307b35″ size=”7″ wide=”yes” center=”yes” radius=”round”]ஃபோட்டோ கேலரி[/su_button]

[Best_Wordpress_Gallery id=”11″ gal_title=”Actress-Aiswarya”]

[su_button url=”https://www.dhinasari.com/cinema/” background=”#307b35″ size=”7″ wide=”yes” center=”yes” radius=”round”]சினிமா[/su_button]

[Best_Wordpress_Gallery id=”12″ gal_title=”சினிமா”]

[su_button url=”https://www.dhinasari.com/cinema/” background=”#307b35″ size=”7″ wide=”yes” center=”yes” radius=”round”]நடிகைகள்[/su_button]

[Best_Wordpress_Gallery id=”13″ gal_title=”நடிகைகள்”]

[su_button url=”https://www.dhinasari.com/cinema/” background=”#307b35″ size=”7″ wide=”yes” center=”yes” radius=”round”]நடிகர்கள்[/su_button]

 

[su_button url=”https://www.dhinasari.com/cinema/” background=”#307b35″ size=”7″ wide=”yes” center=”yes” radius=”round”]படங்கள் : பொது[/su_button]

[Best_Wordpress_Gallery id=”14″ gal_title=”பொது”]

[su_button url=”https://www.dhinasari.com/cinema/” background=”#307b35″ size=”7″ wide=”yes” center=”yes” radius=”round”]ஆன்மிகம்[/su_button]

வேலைவாய்ப்பு தகவல் தரும் இணையதளங்கள்

jobsite வேலைவாய்ப்பு தகவல் அளிக்கும் இணையதளங்கள் – Job websites வேலை தேடுவதற்கு உதவும் வகையில், வேலை வாய்ப்பு தகவல் அளிக்கும் இணையதளங்கள் பட்டியல்…. www.careerbuilder.co.in www.clickjobs.com www.placementpoint.com www.careerpointplacement.com www.glassdoor.co.in www.indtherightjob.com www.employmentguide.com www.JOBSTREET.com www.JOBSDB.COM www.AE.TIMESJOBS.COM www.NAUKRIGULF.COM www.NAUKRI.COM www.GULFTALENT.COM www.BAYAT.COM www.MONSTER.COM www.VELAI.NET www.CAREESMA.COM www.SHINE.COM www.fresherslive.com www.jobsahead.com www.BABAJOBS.com www.WISDOM.COM www.indeed.co.in www.sarkarinaukriblog.com www.jobsindubai.com www.jobswitch.in www.jobs.oneindia.com www.freshersworld.com www.freejobalert.com www.recruitmentnews.in www.firstnaukri.com www.freshnaukri.com www.mysarkarinaukri.com www.freshindiajobs.com www.freshersopenings.in www.freshersrecruitment.in www.chennaifreshersjobs.com [su_divider] அரசு வேலைகள் பற்றி அறிந்துகொள்ள…. www.govtjobs.allindiajobs.in www.timesjobs.com www.naukri.com www.tngovernmentjobs.in www.sarkariexam.co.in www.govtjobs.net.in www.indgovtjobs.in

2015 ஆங்கில வருட ராசி பலன்கள்! (பொது)

நிகழும் மங்களகரமான 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 17ம் தேதி 1-1-2015 வியாழக்கிழமையும் சுக்ல ஏகாதசியும் பரணி நக்ஷத்ரமும் சிம்ம லக்னமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2015 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.  2015 புத்தாண்டு பொதுபலன் சிம்ம லக்னத்தில் வருட பிறப்பு இருப்பதால் லக்னாதிபதி சூரிய பகவான் ஆவார். ஆண்டுதொடக்கத்தில் லக்னாதிபதி சூரியன் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான தனுசில் சஞ்சாரம் பெற்றுள்ளார். இதன் பலன் இந்த ஆண்டு அரசியல் சார்ந்த விஷயங்களில் மாற்றத்தைக் காட்டுகிறது. லக்னாதிபதிக்கு பத்தில் ராகு இருப்பதால் பொது மக்களிடையே வீண் கோபம் உண்டாகும். ஒருவருக்கொருவர் சுமுகமான பேச்சு இல்லாமல் வேகத்துடன் பேசிக் கொள்வார்கள். சுபநிகழ்ச்சிகள் எதிர்பார்த்த அளவு தாராளமாக இருக்கும். புத்திரகாரகன் குரு லக்னத்திலேயே இருப்பதால் குழந்தை பிறப்பு அதிகமாகும். நோய்கள் மருந்து உட்கொள்வதன் மூலம் சரியாகும். அதேபோன்று கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் பெரிய பாதிப்பை தராது. எதிரிகள் தொல்லை, அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும். குருவின் பார்வை 7 ஆம் இடத்தில் பதிவதால் கணவன், மனைவிக்கிடையே சண்டை சச்சரவு தோன்றினாலும் அவை கட்டுப்படுத்தப்படும். சண்டை சமாதானத்தில் முடியும். விவாகரத்துக்கள் குறையும். தொழில் பங்குதாரர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். அரசியலில் திடீர் மாற்றங்கள் உண்டாகலாம். புதிய நபர்களுக்கு அரசியலில் வரவேற்பு இருக்கும். அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்பவையாக இருந்தாலும் ஒருசாரார் அதனை குறை கூறுவார்கள். அரசியல்வாதிகள் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள். வாகனங்கள் வாங்குவோரது எண்ணிக்கை உயரும். அதே நேரத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். காதல் திருமணங்கள் அதிகரிக்கும். காதல் பிரச்சனைகளும் தலை தூக்கும்.  கிரக பெயர்ச்சி (வாக்கியப்படி): குருபெயர்ச்சி: 05-07-2015 அன்று கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இனி 12 ராசிகளுக்குமான பலன்களைப் படியுங்கள்…. [su_heading size=”30″ margin=”30″]2015ம் வருட ராசி பலன்கள் [/su_heading] [su_table]

12-meenam1-mesham2-rishapam3-mithunam
11-kumbam4-katakam
10-makaram5-simmam
9-dhanusu8-vruchikam7-thulam6-kanni

[/su_table]

போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு பொங்கல் ஊக்கத் தொகை

panneerselvam சென்னை: பொங்கல் திருநாளையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு சாதனை ஊக்கத் தொகையாக ரூ.85 முதல் ரூ.625 வரை வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள்தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்கள், போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் 1 லட்சத்து 37 ஆயிரத்து 800 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தை முதன்மை நிலைக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளுக்கு இவர்கள் முதுகெலும்பாக உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் திருநாளையொட்டி சாதனை ஊக்கத்தொகை வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 2014-ஆம் ஆண்டில் 91 நாள்கள் முதல் 151 நாள்களுக்குக் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.85 வீதமும், 151 நாள்கள் முதல் 200 நாள்களுக்குக் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195 வீதமும், 200 நாள்கள், அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 வீதமும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 800 பணியாளர்களுக்கு மொத்தம் ரூ.7 கோடியே 70 லட்சம் சாதனை ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு இருந்தால் மண்ணெண்ணெய் மானியம் ரத்தாகும்!

புதுதில்லி, ஜன.13: மின் இணைப்பு உள்ள வீடுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் விநியோகிப்பதை நிறுத்துமாறு அரசுக்கு பரிந்துரைகள் வந்துள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். தில்லியில் நடைபெற்ற எரிசக்தி பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2011-ல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, மின் இணைப்பு உள்ள வீடுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கக் கூடாது என்று அரசுக்கு பரிந்துரைகள் வந்துள்ளதாகவும், இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதன் பலன் பொதுமக்களைச் சென்றடையவில்லை எனப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மண்ணெண்ணெய் மானியத்துக்காக அரசு, ரூ.30,575 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது.

இஸ்ரோவின் தலைவராக ஏ.எஸ்.கிரண்குமார் நியமனம்

தில்லி, ஜன.13: இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை செயலாளராகவும், இஸ்ரோவின் தலைவராகவும் ஏ.எஸ். கிரண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவைக் குழு, கிரண் குமாரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது. பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ள கிரண் குமார், இஸ்ரோவில் 1975ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இஸ்ரோவின் முக்கிய சாதனை திட்டங்களான சந்திராயன், செவ்வாய் கிரக ஆராய்ச்சி ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு இப்பதவியிலிருப்பார்.