பாகிஸ்தானுக்கு நாம் பல முறை உரிய பதிலடியை கொடுத்துள்ளபோதிலும் அந்நாடு தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை’ என்றார் ராஜ்நாத் சிங். “பாகிஸ்தானுக்கு நாம் பல முறை உரிய பதிலடியைக் கொடுத்துள்ளோம். ஆனாலும் அந்நாடு தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை. எனினும், அமைதியைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். ஜமாத் உத் தாவா உள்ளிட்ட 10 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கடந்த காலங்களிலும் பாகிஸ்தான் பல்வேறு அமைப்புகளைத் தடை செய்தபோதிலும் அந்த அமைப்புகள் புதிய பெயர்களில் மீண்டும் செயல்படத் தொடங்கின. இவ்வாறு எந்த பயங்கரவாத அமைப்பும் புதிய பெயரில் மீண்டும் வந்து பயங்கரவாதச் செயல்களைத் தொடங்காமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார் ராஜ்நாத் சிங். குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இம்மாதம் இந்தியா வருகிறார். அவரது வருகையின்போது ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிடிஐ செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்தபோது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
பதிலடி கொடுத்தும் பாகிஸ்தான் திருந்தவில்லை: ராஜ்நாத் சிங்
படைப்புகளை அனுப்ப
படைப்புகளை அனுப்ப:
தினசரி.காம் தளத்தில் நீங்கள் எழுத விரும்பினால், உங்கள் படைப்புகளை எங்களுக்கு தட்டச்சு செய்து அனுப்பலாம். அடிப்படையாக, தார்மீக ரீதியில் அதற்கான பொறுப்புணர்வுடன் உங்கள் கருத்துகள், படைப்புகளை அனுப்பலாம்.
படைப்புகள் அனுப்ப விரும்புவோர் யூனிகோட் தமிழ் எழுத்துருவில் தட்டச்சு செய்து மின்அஞ்சல் செய்யலாம். தங்களால் இயன்ற அளவில் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைத்தால் நல்லது.
உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: dhinasarinews@gmail.com
- படைப்புகளை வெளியிடுவது, ஆசிரியர் குழுவின் முடிவைப் பொறுத்தது.
- படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே உரியது.
ஜல்லிக்கட்டால் மாடுகள் கொல்லப்படுகின்றன: மேனகா காந்தி
புதுதில்லி: “மனிதர்களையும் மிருகங்களையும் துன்புறுத்தும் ஜல்லிக்கட்டு, மேற்கத்திய கலாசார அடிப்படையிலானது. ஜல்லிக்கட்டின்போது மாடுகளும் மனிதர்களும் கொல்லப்படுகின்றனர். ஜல்லிக்கட்டை பாஜக எதிர்க்கிறது” என்றார் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி. உத்தரப் பிரதேச மாநிலம், பிலிபிட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மேனகா காந்தி பேசியபோது, ஜல்லிக்கட்டு பாரம்பரியம் மேற்கத்தியக் கலாசாரம். அதற்கு பாஜக எதிர்ப்புத் தெரிவிக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். விவசாயிகளுக்குப் பயன்படும் பசுக்களும் காளைகளும் ஜல்லிக்கட்டால் கொல்லப்படுகின்றன. அதோடு, ஜல்லிக்கட்டின் போது மனிதர்களும் கொல்லப்படுகின்றனர். மகர சங்கராந்தி (பொங்கல்) பண்டிகை தாவரங்களையும் மரங்களையும் வழிபடுவதற்காகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அது கொடுமைப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுவது தவறு என்றார். பாரம்பரியமான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Contact us

தினசரி தளம் – dhinasari.com
SSS Media Work -ஆல் நிர்வகிக்கப்படுகிறது.
For Contact:
SSS Media
F – 101, VGN Southern Avenue,
Potheri, Chennai – 603 203
Cell No., : +91 88388 53843
Mail your suggestions to: dhinasarinews@gmail.com
கதை திரைக்கதை வசனம் இயக்கத்தை அடுத்து கமரக்கட்டு
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – படத்தைத் தயாரித்த ரேவ்ஸ் கிரியேஷன்ஸ் மூவீஸின் புதிய தயாரிப்பு கமரக்கட்டு. ராம்கி ராமகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்துக்கு கேமராமேனாகப் பணியாற்றுகிறார் ஆர்.ஸ்ரீதர். பைஸல் இசையில் ராம்கி ராமகிருஷ்ணன் பாடல்கள் எழுதி தள்பதி தினேஷ் சண்டைக் காட்சிகளில் படம் தயாராகிறது. யுவன், ஸ்ரீராம், மனிஷாஜித், டெல்லா, வாசு விக்ரம், சேத்தன், கிரேன் மனோகர், பாலாசிங் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு நடனங்களை அமைத்துள்ளனர் சிவாஜி, விஜய் ஆகியோர்.
விஜயுடன் நடிக்க ஆசை: கப்பல் நடிகை
‘கப்பல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சோனம் பாஜ்வா. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர், தனது முதல் படமான ‘கப்பல்’ வெற்றி அடைந்ததில் உற்சாகத்தில் இருக்கிறார். “நான் பஞ்சாபை சேர்ந்தவள் என்றாலும் என் நண்பர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்தான். இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஷங்கர் தயாரிப்பில் என்னுடைய முதல் படம் வந்திருப்பது மிகவும் பெருமையான விஷயம். ‘கப்பல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய், விக்ரம், ரகுமான், ஷங்கர் என அனைவரையும் ஒரே மேடையில் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. அவர்களின் கனிவான வார்த்தைகளும், உற்சாகமும் என்னை ஊக்கப்படுத்தியது. ‘கப்பல்’ படத்துக்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்திருக்கின்றன. அது தொடர்பாக விரைவில் முறையான அறிவிப்பு வரும். நான் தற்போது மேலும் நிறைய தமிழ் படங்களை பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். திரையுலகின் நுணுக்கங்களை அந்தப் படங்கள் மூலம் கற்றுக் கொண்டு வருகிறேன்…” என்றார் சோனம் பாஜ்வா. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் விஜய்யின் தீவிர ரசிகை ஆகி விட்டாராம் சோனம் பாஜ்வா. எல்லோரையும் கவரும் காந்தம் அவர் என்று கூறியவர், விஜய்க்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. அவருடன் ஜோடியாக ஒரு படத்த்ல் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறேன் என்றாராம். இந்த வருடமே அவரது ஆசை கை கூடும் என்ற நம்பிக்கையுடன் உள்ளாராம் சோனப் பாஜ்வா.
மெசஞ்சர் ஆஃப் காட் – படத்துக்கு பலத்த எதிர்ப்பு
மெசஞ்சர் ஆஃப் காட்’ படத்தை திரையிட பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹரியாணாவில் செயல்படும் “தேரா சச்சா சௌதா’ அமைப்பின் தலைவர் இயக்கி நடித்துள்ள இப்படத்தை வெளியிடக் கூடாது எனக் கூறி, பல்வேறு சீக்கிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதுகுறித்து பதிண்டா மண்டல காவல்துறை ஐ.ஜி. பரமராஜ் சிங் கூறியது: பஞ்சாபின் பதிண்டா மண்டலதுக்குள்பட்ட முக்த்ஸர், மான்ஸா, ஃபெரோஸ்பூர், ஃபரீத்கோட், மோகா ஆகிய மாவட்டங்களில் தேரா சச்சா அமைப்பின் ஆதரவாளர்கள் அதிக அளவில் உள்ளனர். அப்பகுதிகளில் அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்க 13 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஏராளமான துணை ராணுவப் படையினர் பணியில் ஈடுபட அழைக்கப்பட்டுள்ளனர். பதிண்டா பகுதியிலிருந்து தேரா சச்சா அமைப்பைச் சேர்ந்த 15 ஆயிரம் பேர், “மெசஞ்சர் ஆஃப் காட்’ திரைப்படத்தின் பிரத்யேகக் காட்சியைக் காண்பதற்காக ஹரியாணாவின் குர்கான் நகருக்கு வெள்ளிக்கிழமை சென்றனர். அவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
முகவரியைத் தொலைத்து அவதி: ஜப்பானில் நடிகைக்கு உதவிய டாக்ஸி ஓட்டுநர்
அம்புலி 3டி, ஆ படங்களின் வெற்றி இயக்குனர்கள் ஹரி-ஹரீஷ் இயக்கும் ஜம்போ 3டி படத்தில் கோகுல் நாயகன் வேடத்தில் நடிக்கிறார். இவருடன் சுகன்யா, பேபி ஹம்சிகா, அஞ்சனா, லொள்ளுசபா ஜீவா, ஈரோடு மகேஷ், யோக் ஜப்பீ, ‘கும்கி’ அஷ்வின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம்.எஸ்.ஜி மூவீஸ் சார்பில் ஜி.ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஓகிடா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் பெரும்பாலும் ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகி அஞ்சனா கீர்த்தி தனது அனுபவத்தை கூறுகையில்… “இயக்குனர்கள் ஹரி- ஹரீஷ் உடன் பணிபுரிவது மிக இனிதானது. இருவரும் வேகமாகவும், விவேகமாகவும் வேலை செய்ய கூடியவர்கள். படத்தில் ஒரு காட்சியில் நான் ஜப்பான் பொம்மையாக நடிக்க வேண்டியிருந்தது. கண் இமைக்காமல், சலனமற்ற பொம்மையாக அசைவில்லாமல் நடிக்க சொல்லிக் கொடுத்தார். மேலும், பேபி ஹம்சிகா இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜப்பானின் டோக்கியோ, டோயாமா நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. டோக்கியோ தமிழ்ச் சங்கத்தினர் கனிவாக வரவேற்று உபசரித்தனர். ஒரு நாள் நான் தனியாக ஷாப்பிங் சென்ற போது ஜப்பானிய மொழியில் எழுதிக் கொடுத்திருந்த முகவரியை எங்கோ தொலைத்துவிட்டேன். ஒரு ஜப்பானிய டாக்சி ஓட்டுனர்தான் அப்போது எனக்கு உதவினார். நான் இந்தியாவைச் சேர்ந்தவள் என்று தெரிந்தவுடன் என்னிடம் அன்பாகப் பேசினார். ரஜினிகாந்த் குறித்தும், தமிழிலும் பேசினார்.” ஜப்பானிய நடிகர் நடிகைகளுடன் நடித்தோம். அங்குள்ள பத்திரிக்கைகளில் எங்களைப் பற்றி செய்திகள் வந்தது பெருமையாக இருந்தது. நகைச்சுவை கொண்ட 3டி படமாக உருவாகி வரும் இந்தப் படம் குழந்தைகளை அதிகம் கவரும்.” என்றார் அஞ்சனா.
சரித்திர வேடத்தை அடுத்து மீண்டும் கல்லூரி மாணவன் வேடத்தில் விஜய்!
சிம்புதேவன் இயக்கும் ‘புலி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்சிகா என இரு நாயகிகள். இவர்களுடன் சென்ற தலைமுறைக் கனவுக் கன்னி ஸ்ரீதேவி, நான் ஈ படத்தில் நடித்த சுதீப், தம்பி ராமையா என பலரும் திறமை காட்டி வருகின்றனர். இந்தப் படத்தில் உள்ள சிறப்பான அம்சம், விஜய் முதன் முதலாக ஒரு சரித்திர பின்னனிக் கொண்ட கதையில் நடிப்பதுதான். அதுவும் மாறுபட்ட இரட்டைக் கதாபாத்திரம் வேறு. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க இந்தப் படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. புலி படத்தையடுத்து ராஜா ராணி இயக்குனர் ‘அட்லி’ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் கல்லூரி மாணவராக நடிக்கப் போகிறாராம். இதற்கு முன்னர் நண்பன் படத்தில் மாணவன் வேடத்தில் நடித்து அசத்தினார் விஜய். இந்நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அட்லி படத்தில் மீண்டும் அப்படி ஒரு வேடம் ஏற்கவிருக்கிறாராம்.

