நண்பர்களாகட்டும்… சில மனிதர்களாகட்டும்… அல்லது சில அழகுக் காட்சிகள், படங்கள், புகைப்படங்கள்… போன்றவைகளாகட்டும்…, எல்லாம் நம் மனசு நன்றாக இருக்கும்போதுதான் அந்த ரசிகத் தன்மையும் மகிழ்ச்சியும்!
காலை துயில் கலைந்து எழும்போது சிலருக்கு சுவரில் மாட்டப் பட்டிருக்கும் அழகிய சித்திரம் கண்டால் போதும்….. அன்றைய மனநிலை மகிழ்ச்சிகரமாகத் துவங்கும்.
சில நேரம் மன அழுத்தத்தின் காரணத்தால் அதே அழகான படம்கூட சலிப்பைத் தரலாம்.
விருப்பு வெறுப்பற்ற மனநிலை கைவர வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே பயிற்சி மேற்கொண்டு வந்தேன். ஆனால்… பழக்கத்தால் சிலரிடம் விருப்பும் நடத்தையால் சிலரிடம் வெறுப்பும் தொற்றிக் கொண்டு விடுகிறது. மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் மனத்தில் வெறுப்பைத் தோற்றுவித்த சில நபர்கள் பணியிடத்தில் இருந்தபோதும், வெறுப்பை விலக்கி விருப்பை விதைக்க முயன்றேன். முடியவில்லை. நினைக்கும் போதெல்லாம் மனது வெறுப்பையும் வெறுமையையும் தந்துவிடுகிறது. எனவே புறக்கணித்தல் அல்லது அம்மக்களை மறத்தல்- இதுவே வழி என செயல்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இது ஒருபுறம் இருக்கட்டும்…. உளவியலில் இன்னொரு புறம்..!
தினந்தோறும் பார்த்து ரசிக்கும் அதே காட்சி… அதே முகங்கள்… அதே அழகு! அதே புன்னகை! இருந்தாலும், காட்சியின் கோலமும் எழிலும் மனம் நன்றாக இருக்கும் நேரத்தில் எழிலாய்த் தோன்றும், மனநிலை மாய்ந்தால் வெறுப்பாய்க் கழியும். மாற்றம் பார்க்கப்படும் பொருளில் இல்லை என்றாலும், பார்க்கும் மனத்தில் இருந்துவிடுகிறது.
இப்படியெல்லாம் எத்தனை எத்தனை உளவியல் தத்துவங்களை படிப்பது, எழுதுவது, பேசுவது?!
இந்த உளவியல் கலையை எப்படி நம் முன்னோர் தமிழ்க் கவியாய்ப் படைத்துக் காட்டியுள்ளனர்.? தோழியும், தலைவன், தலைவியும், தாயும், தாதியும் இல்லாமல் சங்க இலக்கியமா? ஒவ்வொருவரின் கூற்றும் ஒவ்வொரு உளவியல் காட்சியைக் காட்டிச் செல்லுமே!
ஒரு பாடல்….. பள்ளிப் பருவத்தில் மனப்பாடப் பகுதியில் படித்த நினைவு, ஆண்டு பல கழிந்தாலும் அகல மறுக்கிறது மனதை விட்டு!
தோழியின் கூற்றாக வருகிறது…
வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே!
– என்று வாயில் வேண்டிப் புக்க தலைவனுக்கு தோழி கூறியதாக வருகிறது.
(அதாவது, தன்னுடன் ஊடல் கொண்டிருந்த தலைவியிடம், ஊடலைத் தணித்து உடன்படச் செய்யுமாறு தூது செல்ல தலைவியின் தோழியிடம் தலைவன் துணை நாடுகிறான். அதற்கு, தோழியானவள், இந்தப் பாடலைக் கூறி, உன்னுடைய மனது அன்று எப்படி இருந்தது… அன்று என் தோழியை எப்படி எல்லாம் புகழ்ந்தீர்… இன்று எல்லாம் மாறிவிட்டதே! எப்படி உம்மை நாம் நம்புவது என்று தூது செல்ல மறுக்கிறாள்….)
ஒரு காலத்தில், கசப்போ கசப்பென்று படுகசப்பாக இருக்கும் வேம்பின் இளங்காயை என் தோழி உமக்குத் தந்தபோது, நீர் அதனை வாங்கி,.. அட… அட… என்ன ஓர் இனிப்பு!? வெல்லக் கட்டி போல் அல்லவா இருக்கிறது என்று புகழ்ந்து உண்டீர். அவள் அழகும் அணுக்கமும் உம்மை கிறக்கத்தில் ஆழ்த்தியிருந்தன. ஆனால் இன்று… பாரி வள்ளலின் பறம்பு மலையில் தை மாதக் குளிரில் அதனினும் குளிர்ந்த தண்மையுடன் சுனையில் வரும் சுவை நீரை வாங்கிப் பருகிய நீர், என்ன இது இவ்வளவு வெப்பமாக உவர்ப்புச் சுவையுடன் இருக்கிறது என்று கூசாமல் வெறுப்பை உமிழ்கிறீர். அன்று நீர் எம் தோழியைப் பாராட்டிய போது வசந்த காலத்தே மகிழ்வில் மிதந்தாள் தோழி…. இன்று வெறுப்பில் இயற்கை அழகை, இனிய சுவையை மறுத்து ஒதுக்குகையில், மனம் கசந்த காலமிதுவோ என எம் தோழி மருண்டு ஒதுங்குகிறாள்… என்னே உம் மன நிலை?! இனியும் உமக்காகத் தூது போவானென்? என்று விலகிச் செல்கிறாள் அவள்.
இந்தப் பாடல் காட்டும் தலைவனின் மனநிலையில் நான்..!
மனம் காட்டும் கண்ணாடி!
அம்மா… என்னை மன்னித்துவிடு!
——————————————
அன்புள்ள அம்மாவுக்கு…..
—————————————–
அம்மா… என் அம்மா…!
கனவு காணக் கற்றுக் கொடுத்தவர் நீங்கள்!
கனவு மட்டுமே கண்டு கொண்டிராமல்
அதை நனவாக்கும் மனவலிமை நல்கியதும் நீங்களே!
இளவயதில் முதல்தர மதிப்பெண் நோக்கி வெறியூட்டினீர்கள்!
நிறைவேற்றினேன்!
சங்கீதப் பயிற்சிக்கு உடன் வந்து நின்றீர்கள்!
சேர்ந்திசை பாடினோம்!
எத்தனை நாள் பசியோடு நான் பள்ளியில் இருந்து திரும்பியிருப்பேன்!
சந்தியா வந்தனம் இன்றி சாப்பாடு இல்லை என்றீர்கள்!
வெறுப்போடு துவங்கி வேறு வழியின்றிப் பழக்கினேன்!
ஒழுங்கு முறையாய்ப் புகுந்து உள்கலந்தது!
அம்மா… என் வாழ்க்கை என் விருப்பத்தால் அமைந்ததில்லை!
ஒவ்வொன்றும் உங்கள் விருப்பம்! உங்கள் கனவு!
நனவாக்கிக் காட்ட முயன்றதே என் லட்சியம்!
எத்தனை நாட்கள் அம்மா…
என் கவிதைக் கிறுக்கல்களை தலைமாட்டில் வைத்துத் தூங்கியிருக்கின்றேன்!
எழுந்து பார்க்கும்போது அதைச் சொல்லி சிலாகிப்பீர்கள்!
என் தாத்தா தமிழ்ப் புலவர்! புத்தனேரி புத்தி உனக்கும் வந்ததடா என்பீர்கள்!
உற்சாகம் தந்த உங்கள் பதிலால்…
பதின்ம வயதினிலே தேடித்தேடித் தமிழ் படித்தேன்!
அப்போதெல்லாம்…
தமிழ் சோறு போடுமாலே! ஒழுங்கா படிக்கிற வழியைப் பார்!
திட்டித் தீர்த்த அப்பா… எனக்கு வில்லனாய்த்தான் தோன்றினார்!
நெருப்புக் கோளமாய் வெறுப்புக் கோபம் சுமந்தேன்!
வேறு வழியின்றி…
கல்லூரிக் காலத்தே கணக்கு புகுந்தது!
பிணக்கின்றி தமிழும் ஆண்டது!
வேதம் கற்கச் சொன்னீர்கள்… கற்றேன்!
தர்மம் மீறாதிருக்க வேண்டும் என்பீர்கள்!
தருமச் சிந்தை நீங்கள் சொன்ன கதைகளால் என்னுள் புகுந்தன!
பிரபந்தம் பாடச் சொன்னீர்கள்… செய்தேன்!
சமையல் கற்றுத் தந்தீர்கள்! நுணுக்கம் கற்றேன்!
தையல் இயந்திரத்தின் சத்தத்தில் கவிச் சந்தம் தருவேன்!
ரசித்துக் கேட்பீர்கள்! உன் விளக்கமே அலாதி என்பீர்கள்!
யாரோ இதழ்களில் எழுதிய துணுக்குத் தோரணங்களையும் கட்டுரைகளையும்
பிழை மலிந்தும் பிழைத்திருக்கின்றனவே என்றீர்கள்!
நீ மட்டும் இதை எழுதினால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்…?
உங்கள் ஆசையை நிறைவேற்ற… எழுதத் தொடங்கினேன்!
படிப்பு வேறாயினும் பணி வேறாயினும்
அம்மா… இந்த எழுத்தின் சுவையால்…
பத்திரிகை எனை ஆட்கொண்டது! இதழியல் என்னுள் ஊற்றுக் கொண்டது!
எனை அறியாமல் என்னை ஆக்கிரமித்த இந்தத் துறைக்காக
மகிழ்வு கண்டவர் என்னவோ நீங்கள்தானே அம்மா!
வானொலிப் பேச்சா..? தொலைக்காட்சி நேரலையா…?
நீ பேசி நான் கேட்க வேண்டும் என்றீர்கள்!
எல்லாமும் நன்றாய்த்தான் நிகழ்ந்தன!
இதழியலின் எல்லா எல்லைகளிலும் கால்பதிக்க…
என் னம்மா… எல்லாம் நீங்கள் தந்த ஊக்கம்தானே!
ஆனால் இப்போது..!
என்னம்மா ஆயிற்று உங்களுக்கு..?
வேறு வேலையில் நீ இருந்திருக்கக் கூடாதா என்கிறீர்கள்?!
உங்கள் மனத்தை மாற்றியது எது?
ஆசைக் கூட்டைக் கலைத்தவர் யார்?
உங்களின் எல்லா ஆசைகளையும் இத்தனை நாள்
நிறைவேற்றிக் கொண்டே வந்தேன்!
எல்லாம்
அந்த இறைவன்.. அரங்கன் பின்னே நின்று இயக்கியதால்!
எல்லாச் சூழலிலும் சக்தி வாய்ந்ததாக அவன் அருள் இருந்திருக்கிறது…
ஆனால் அம்மா….
அண்மைக் காலமாக நீங்கள் புதிதாக ஓர் ஆசையை வெளியிட்டீர்கள்!
வருடங்கள் பல உருண்டோடிய பின்னே…
பேரன் பேத்தி பார்க்க எனக்கும் ஆசையிருக்காதா என்றீர்கள்!
உண்மைதான் அம்மா!
ஆனால் காலம் மாறிவிட்டதே! கருத்தும் கடந்துவிட்டதே!
கடவுளைக் காட்டிலும் வலிமையானவர்கள் ஆதிக்கம் செலுத்துவதால்…
அம்மா….
இது மட்டும் நிறைவேற்ற இயலாமல் போகிறது!
கடவுளைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவராக
பெண்ணைப் பெற்றவர் முன் நிற்கிறார்!
இந்துஇசத்தைக் காட்டிலும் வலிமை வாய்ந்ததாக
கன்ஸ்யூமர்இசம் முன் நிற்கிறது!
அளவற்ற பேராசைகளுடன் கல்யாணச் சந்தை!
எல்லையற்ற எதிர்பார்ப்புகளுடன் கல்யாணப் பெண்!
உங்கள் பையனுக்கு பத்திரிகை வேலையா?
அப்படி என்றால் மேற்கொண்டு பேச வேண்டாம்…
இப்படிப்பட்ட பேச்சுகளைக் கேட்டு நீங்கள் வருந்தினால்….
அம்மா… விட்டு விடுங்கள்!
புரிதல் இல்லாத வாழ்க்கை நரகம்!
அம்மா…
இவர்களுக்காக….. நீங்கள் கற்றுத் தந்த
எளிமையை, ஒழுக்கத்தை, பண்பை, தர்ம நெறியை
அம்மா….
என்னால் கைவிட முடியாது!
மன்னித்து விடுங்கள் உங்கள் மகனை!
அம்மா… என்னை மன்னித்துவிடு!
——————————————
அன்புள்ள அம்மாவுக்கு…..
—————————————–
அம்மா… என் அம்மா…!
கனவு காணக் கற்றுக் கொடுத்தவர் நீங்கள்!
கனவு மட்டுமே கண்டு கொண்டிராமல்
அதை நனவாக்கும் மனவலிமை நல்கியதும் நீங்களே!
இளவயதில் முதல்தர மதிப்பெண் நோக்கி வெறியூட்டினீர்கள்!
நிறைவேற்றினேன்!
சங்கீதப் பயிற்சிக்கு உடன் வந்து நின்றீர்கள்!
சேர்ந்திசை பாடினோம்!
எத்தனை நாள் பசியோடு நான் பள்ளியில் இருந்து திரும்பியிருப்பேன்!
சந்தியா வந்தனம் இன்றி சாப்பாடு இல்லை என்றீர்கள்!
வெறுப்போடு துவங்கி வேறு வழியின்றிப் பழக்கினேன்!
ஒழுங்கு முறையாய்ப் புகுந்து உள்கலந்தது!
அம்மா… என் வாழ்க்கை என் விருப்பத்தால் அமைந்ததில்லை!
ஒவ்வொன்றும் உங்கள் விருப்பம்! உங்கள் கனவு!
நனவாக்கிக் காட்ட முயன்றதே என் லட்சியம்!
எத்தனை நாட்கள் அம்மா…
என் கவிதைக் கிறுக்கல்களை தலைமாட்டில் வைத்துத் தூங்கியிருக்கின்றேன்!
எழுந்து பார்க்கும்போது அதைச் சொல்லி சிலாகிப்பீர்கள்!
என் தாத்தா தமிழ்ப் புலவர்! புத்தனேரி புத்தி உனக்கும் வந்ததடா என்பீர்கள்!
உற்சாகம் தந்த உங்கள் பதிலால்…
பதின்ம வயதினிலே தேடித்தேடித் தமிழ் படித்தேன்!
அப்போதெல்லாம்…
தமிழ் சோறு போடுமாலே! ஒழுங்கா படிக்கிற வழியைப் பார்!
திட்டித் தீர்த்த அப்பா… எனக்கு வில்லனாய்த்தான் தோன்றினார்!
நெருப்புக் கோளமாய் வெறுப்புக் கோபம் சுமந்தேன்!
வேறு வழியின்றி…
கல்லூரிக் காலத்தே கணக்கு புகுந்தது!
பிணக்கின்றி தமிழும் ஆண்டது!
வேதம் கற்கச் சொன்னீர்கள்… கற்றேன்!
தர்மம் மீறாதிருக்க வேண்டும் என்பீர்கள்!
தருமச் சிந்தை நீங்கள் சொன்ன கதைகளால் என்னுள் புகுந்தன!
பிரபந்தம் பாடச் சொன்னீர்கள்… செய்தேன்!
சமையல் கற்றுத் தந்தீர்கள்! நுணுக்கம் கற்றேன்!
தையல் இயந்திரத்தின் சத்தத்தில் கவிச் சந்தம் தருவேன்!
ரசித்துக் கேட்பீர்கள்! உன் விளக்கமே அலாதி என்பீர்கள்!
யாரோ இதழ்களில் எழுதிய துணுக்குத் தோரணங்களையும் கட்டுரைகளையும்
பிழை மலிந்தும் பிழைத்திருக்கின்றனவே என்றீர்கள்!
நீ மட்டும் இதை எழுதினால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்…?
உங்கள் ஆசையை நிறைவேற்ற… எழுதத் தொடங்கினேன்!
படிப்பு வேறாயினும் பணி வேறாயினும்
அம்மா… இந்த எழுத்தின் சுவையால்…
பத்திரிகை எனை ஆட்கொண்டது! இதழியல் என்னுள் ஊற்றுக் கொண்டது!
எனை அறியாமல் என்னை ஆக்கிரமித்த இந்தத் துறைக்காக
மகிழ்வு கண்டவர் என்னவோ நீங்கள்தானே அம்மா!
வானொலிப் பேச்சா..? தொலைக்காட்சி நேரலையா…?
நீ பேசி நான் கேட்க வேண்டும் என்றீர்கள்!
எல்லாமும் நன்றாய்த்தான் நிகழ்ந்தன!
இதழியலின் எல்லா எல்லைகளிலும் கால்பதிக்க…
என் னம்மா… எல்லாம் நீங்கள் தந்த ஊக்கம்தானே!
ஆனால் இப்போது..!
என்னம்மா ஆயிற்று உங்களுக்கு..?
வேறு வேலையில் நீ இருந்திருக்கக் கூடாதா என்கிறீர்கள்?!
உங்கள் மனத்தை மாற்றியது எது?
ஆசைக் கூட்டைக் கலைத்தவர் யார்?
உங்களின் எல்லா ஆசைகளையும் இத்தனை நாள்
நிறைவேற்றிக் கொண்டே வந்தேன்!
எல்லாம்
அந்த இறைவன்.. அரங்கன் பின்னே நின்று இயக்கியதால்!
எல்லாச் சூழலிலும் சக்தி வாய்ந்ததாக அவன் அருள் இருந்திருக்கிறது…
ஆனால் அம்மா….
அண்மைக் காலமாக நீங்கள் புதிதாக ஓர் ஆசையை வெளியிட்டீர்கள்!
வருடங்கள் பல உருண்டோடிய பின்னே…
பேரன் பேத்தி பார்க்க எனக்கும் ஆசையிருக்காதா என்றீர்கள்!
உண்மைதான் அம்மா!
ஆனால் காலம் மாறிவிட்டதே! கருத்தும் கடந்துவிட்டதே!
கடவுளைக் காட்டிலும் வலிமையானவர்கள் ஆதிக்கம் செலுத்துவதால்…
அம்மா….
இது மட்டும் நிறைவேற்ற இயலாமல் போகிறது!
கடவுளைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவராக
பெண்ணைப் பெற்றவர் முன் நிற்கிறார்!
இந்துஇசத்தைக் காட்டிலும் வலிமை வாய்ந்ததாக
கன்ஸ்யூமர்இசம் முன் நிற்கிறது!
அளவற்ற பேராசைகளுடன் கல்யாணச் சந்தை!
எல்லையற்ற எதிர்பார்ப்புகளுடன் கல்யாணப் பெண்!
உங்கள் பையனுக்கு பத்திரிகை வேலையா?
அப்படி என்றால் மேற்கொண்டு பேச வேண்டாம்…
இப்படிப்பட்ட பேச்சுகளைக் கேட்டு நீங்கள் வருந்தினால்….
அம்மா… விட்டு விடுங்கள்!
புரிதல் இல்லாத வாழ்க்கை நரகம்!
அம்மா…
இவர்களுக்காக….. நீங்கள் கற்றுத் தந்த
எளிமையை, ஒழுக்கத்தை, பண்பை, தர்ம நெறியை
அம்மா….
என்னால் கைவிட முடியாது!
மன்னித்து விடுங்கள் உங்கள் மகனை!
கவிதை – ரசனை- வார்த்தைகள் அற்ற பரிமாற்றம்!

எழுத அமர்ந்தால் வருவதில்லை!
எழுத இயலா நேரத்தில் எதிர்ப்பட்டுக் கிளம்பும்!
வேறென்ன…?
கவிதைதான்!
உள்ளத்தின் உள்ளே ஊற்றெடுக்கும் கவியின்பம்,
மெள்ளத் திறந்து வெளிப்பட்டால் தனியின்பம்.
கடலைச் சென்று சேராத நதியைப் போல்
மனதைச் சென்று தொடாத கவியும் வீண்!
நம்மில் பார்வை தனித்திருந்தால் பாட்டுத்தான்!
மனத்தே பாவையும் குடியிருந்தால் கவிதைதான்!
பார்வை சரி… வார்த்தைகள் வேண்டுமே!
வார்த்தைகள் மட்டுமே இருந்துவிட்டால் கவிதை வருமா?
வார்த்தைகள் இல்லாமலும் கவிதை இருக்கும்!
காரணம் அங்கே இருப்பது புரிந்துணர்வு!
ஆம் ஆம்!
கவி எழுதச் சொற்கள் அவசியமா?
கருத்தோடு கேட்டு நின்ற கேள்வி பலகாலம்!
எண்ணக் குதிரை பாய்ந்தோட…
எனக்குக் கிடைத்தது ஒரு புத்தகம்!
ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகம்!
ரசித்துப் படித்தேன்…
ரசனைக்குத் தீனி ரகம் ரகமாய்!
ரசனை மட்டும் ஒன்றாயிருந்தால் நீங்களும் ரசிக்கலாம்!
ஏர்வாடியாரின் அந்தக் கவிதை இதோ..!
மொழியின் முன் மண்டியிட்டு
வார்த்தை வரம் கேட்டேன்
அரசியல் வாதிகள்
அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்
கட்டுரையாளர்கள் சிலர்
கேட்டு வாங்கிப் போனார்கள்
மீதமிருந்ததை பேசவும் ஏசவும்
மனைவியார் வாங்கிக் கொண்டார்
தாமதமாக வந்து நிற்கிறாயே தமிழ்க் கவிஞனே என
மொழி மிகவும் வருத்தியது.
வேறு வழியின்றி
வெற்றுக் காகிதத்தை மடித்து
வழியில் என் காதலியிடம் தந்தேன்.
வாங்க மறுத்த அவள்…
“வேண்டாம் நீ என்ன எழுதியிருப்பாய் என
எனக்குத் தெரியும்” என்றாள்.
வார்த்தைகளே இல்லாத கவிதையை
வாசிக்காமலேயே அவள் புரிந்து கொண்டதும்தான் தெரிந்தது….
“கவிதைக்கு வார்த்தைகள் கட்டாயம் இல்லை!” என்று!
– ஏர்வாடியாரின் இந்தக் கவிதை
ஏனோ எனை வாட்டிவிட்டது!
ஆம்! ஒரு செயல்கூட அழகுக் கவிதையை
வெளிப்படுத்தும் அதிசயம் இங்கே!
உள்ளம் படிக்கப் படுகிறதே! அதுதான் காரணம்!
கவிதை – ரசனை- வார்த்தைகள் அற்ற பரிமாற்றம்!

எழுத அமர்ந்தால் வருவதில்லை!
எழுத இயலா நேரத்தில் எதிர்ப்பட்டுக் கிளம்பும்!
வேறென்ன…?
கவிதைதான்!
உள்ளத்தின் உள்ளே ஊற்றெடுக்கும் கவியின்பம்,
மெள்ளத் திறந்து வெளிப்பட்டால் தனியின்பம்.
கடலைச் சென்று சேராத நதியைப் போல்
மனதைச் சென்று தொடாத கவியும் வீண்!
நம்மில் பார்வை தனித்திருந்தால் பாட்டுத்தான்!
மனத்தே பாவையும் குடியிருந்தால் கவிதைதான்!
பார்வை சரி… வார்த்தைகள் வேண்டுமே!
வார்த்தைகள் மட்டுமே இருந்துவிட்டால் கவிதை வருமா?
வார்த்தைகள் இல்லாமலும் கவிதை இருக்கும்!
காரணம் அங்கே இருப்பது புரிந்துணர்வு!
ஆம் ஆம்!
கவி எழுதச் சொற்கள் அவசியமா?
கருத்தோடு கேட்டு நின்ற கேள்வி பலகாலம்!
எண்ணக் குதிரை பாய்ந்தோட…
எனக்குக் கிடைத்தது ஒரு புத்தகம்!
ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகம்!
ரசித்துப் படித்தேன்…
ரசனைக்குத் தீனி ரகம் ரகமாய்!
ரசனை மட்டும் ஒன்றாயிருந்தால் நீங்களும் ரசிக்கலாம்!
ஏர்வாடியாரின் அந்தக் கவிதை இதோ..!
மொழியின் முன் மண்டியிட்டு
வார்த்தை வரம் கேட்டேன்
அரசியல் வாதிகள்
அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்
கட்டுரையாளர்கள் சிலர்
கேட்டு வாங்கிப் போனார்கள்
மீதமிருந்ததை பேசவும் ஏசவும்
மனைவியார் வாங்கிக் கொண்டார்
தாமதமாக வந்து நிற்கிறாயே தமிழ்க் கவிஞனே என
மொழி மிகவும் வருத்தியது.
வேறு வழியின்றி
வெற்றுக் காகிதத்தை மடித்து
வழியில் என் காதலியிடம் தந்தேன்.
வாங்க மறுத்த அவள்…
“வேண்டாம் நீ என்ன எழுதியிருப்பாய் என
எனக்குத் தெரியும்” என்றாள்.
வார்த்தைகளே இல்லாத கவிதையை
வாசிக்காமலேயே அவள் புரிந்து கொண்டதும்தான் தெரிந்தது….
“கவிதைக்கு வார்த்தைகள் கட்டாயம் இல்லை!” என்று!
– ஏர்வாடியாரின் இந்தக் கவிதை
ஏனோ எனை வாட்டிவிட்டது!
ஆம்! ஒரு செயல்கூட அழகுக் கவிதையை
வெளிப்படுத்தும் அதிசயம் இங்கே!
உள்ளம் படிக்கப் படுகிறதே! அதுதான் காரணம்!
திருப்பாவை பாசுரம் 26 (மாலே மணிவண்ணா)

மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
‘ஒருத்தி மகனாய்’ பாசுரத்தில் ‘உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்’ என்றார்கள் ஆய்ச்சியர்கள். அதுகேட்ட கண்ணன், ‘இதில் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. நம் மீது விருப்பம் என்றால் வேறு ஒன்றையும் விரும்பக் கூடாதே! பிறகு ஏன் இவ்வாறு லோகாயதப் பொருள்களைக் கேட்டு நிற்கிறீர்கள்?” என்றான்.
அதற்கு ஆய்ச்சிகள், “பிரானே. உன் திருமுகத்தைக் கண்டு, உன் திருநாமங்களை வாயாரச் சொல்ல, துணையாக இருக்கும்படியான நோன்பை பெரியவர்கள் கைக்கொள்ளச் சொன்னார்கள். அதற்குத் தேவைப்படுபவற்றை நீ தந்தருள வேண்டும்” என்று பிரார்த்திக்கும் பாசுரம் இது.
அடியார் மீது அன்பு கொண்டவனே! நீல மணி நிறத்தை உடையவனே! பிரளய காலத்தின் போது, ஆல் இலையில் பள்ளி கொண்டு அகிலம் காத்தவனே! மார்கழி நீராட்டத்துக்காக, உத்தமர்கள் கடைப்பிடிக்கக் கூடிய முறைகளில் வேண்டியவற்றைக் கேட்பாயாகில், அவற்றைச் சொல்லுகிறோம். பூமி உள்ளிட்ட அனைத்து உலகங்களும் நடுங்கும்படி, ஒலி எழுப்பக் கூடியது
பாஞ்சசன்யம். பாலைப் போன்ற தூய வெண்மை நிறத்தை உடைய அந்தப் பெருஞ்சங்கைப் போலிருக்கும் சங்குகள் வேண்டும். அதிக இடம் கொண்டதும் மிகப் பெரியனவுமான பறைகள் வேண்டும். திருப்பல்லாண்டு பாடுகின்றவர்கள், மங்கள தீபங்கள், கொடிகள், மேற்கட்டியாகிற விதானம் எல்லாம் வேண்டும். எங்கள் நோன்பு நிறைவேற இவற்றைத் தந்தருள வேண்டும்” என்று வேண்டுகிறார்கள் இந்தப் பாசுரத்தில்.
நோன்புக்கு இதென்ன பொருள்கள்? பெருமானின் திருப்பள்ளியெழுச்சிக்கு சங்குகள் வேண்டும்; புறப்பாடுக்குப் பறை வேண்டும்; பறை கொட்டிச் செல்லும்போது எதிரே நின்று திருப்பல்லாண்டு பாட அரையர் வேண்டும்; அவ்வாறு பாடுபவர்களும் நாங்களும் ஒருவர் முகம் ஒருவர் கண்டு செல்ல மங்களதீபம் வேண்டும்; நெடுந் தொலைவிலேயே எங்கள் கூட்டத்தைக் காண வசதியாக கொடி வேண்டும்; புறப்பட்டுப் போகும்போது பனி தலையின் மீது விழாமல் காக்க ஒரு மேற்கட்டி வேண்டும். இவையே இவர்களின் நோன்புக்கு வேண்டிய பொருள்களாம்!
விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் சிக்ஷ அஷ்டகத்தில் இருந்து…
த்ருணாதபி சுநீசேன தரோரபி ஸஹிஷ்ணுனா |
அமானினா மானதேன கீர்த்தனீய: ஸதா ஹரி: ||
— வைணவன் என்போன் எப்படிப்பட்டவன் என்று நாமக்கல் கவிஞர் பாடியது பலருக்கும் நினைவிருக்கலாம். அத்தகைய தன்மையை ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மஹாபிரபு பாடிவைத்தது இப்படி…
த்ருணாத் அபி சு நீச-ஏன: தரோர் அபி ஸஹிஷ்ணுனா | அமானி- நா மானத ஏன கீர்த்தனீய ஸதா ஹரி ||
புல்லைக் காட்டிலும் தன்னைத் தாழ்ந்தவனாக (நீசனாக) நினைப்பவன்; மரத்தைப் போல் பொறுமை காப்பவன்; (மானம் அவமானம் என) புகழையோ, மதிப்பையோ பெற விரும்பாதவன்; (ஆனால் இவற்றைப் பிறருக்கு வழங்க எப்போதும் ஆர்வத்துடன் இருப்பவன்) இத்தகையவனே திருமாலின் திருநாமத்தை கீர்த்தனம் பண்ணத் தகுதி பெற்றவன்!
– இப்போது நம்மை நாமே மனமெனும் உரைகல்லில் உரசிப் பார்ப்போம்! இந்த இலக்கணம் பொருந்துகிறதா என்று!
3rd text:
trinad api sunichena taror api sahishnuna
amanina manadena kirtaniyah sada harih
One should chant the holy name of the Lord in a humble state of mind, thinking oneself lower than the straw in the street; one should be more tolerant than a tree, devoid of all sense of false prestige and should be ready to offer all respect to others. In such a state of mind one can chant the holy name of the Lord constantly.
pic:thanks to: https://www.harekrsna.de/Siksastaka/Siksastakam-E.htm
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் சிக்ஷ அஷ்டகத்தில் இருந்து…
த்ருணாதபி சுநீசேன தரோரபி ஸஹிஷ்ணுனா |
அமானினா மானதேன கீர்த்தனீய: ஸதா ஹரி: ||
— வைணவன் என்போன் எப்படிப்பட்டவன் என்று நாமக்கல் கவிஞர் பாடியது பலருக்கும் நினைவிருக்கலாம். அத்தகைய தன்மையை ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மஹாபிரபு பாடிவைத்தது இப்படி…
த்ருணாத் அபி சு நீச-ஏன: தரோர் அபி ஸஹிஷ்ணுனா | அமானி- நா மானத ஏன கீர்த்தனீய ஸதா ஹரி ||
புல்லைக் காட்டிலும் தன்னைத் தாழ்ந்தவனாக (நீசனாக) நினைப்பவன்; மரத்தைப் போல் பொறுமை காப்பவன்; (மானம் அவமானம் என) புகழையோ, மதிப்பையோ பெற விரும்பாதவன்; (ஆனால் இவற்றைப் பிறருக்கு வழங்க எப்போதும் ஆர்வத்துடன் இருப்பவன்) இத்தகையவனே திருமாலின் திருநாமத்தை கீர்த்தனம் பண்ணத் தகுதி பெற்றவன்!
– இப்போது நம்மை நாமே மனமெனும் உரைகல்லில் உரசிப் பார்ப்போம்! இந்த இலக்கணம் பொருந்துகிறதா என்று!
3rd text:
trinad api sunichena taror api sahishnuna
amanina manadena kirtaniyah sada harih
One should chant the holy name of the Lord in a humble state of mind, thinking oneself lower than the straw in the street; one should be more tolerant than a tree, devoid of all sense of false prestige and should be ready to offer all respect to others. In such a state of mind one can chant the holy name of the Lord constantly.
pic:thanks to: https://www.harekrsna.de/Siksastaka/Siksastakam-E.htm
நாடகங்களில் வளர்ந்த தமிழிசை!
இந்தப் பாடலைப் பாடிக் கேட்கும் போது உள்ளத்தில் எழும் மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் தமிழிசையின் மகத்துவத்தைப் பறைசாற்றும். தமிழிசை மூவரில் ஒருவரான அருணாசலக் கவிராயர் இயற்றிய இது ஏதோ ஒரு தனிப்பாடல் போலத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இது அவர் இயற்றிய ராம நாடகத்தில் உள்ள பாடல் அல்லவா?
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாண் ஆக்கி என்று பாடும்போது, இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும் சிலப்பதிகார நாடகமும் நமக்கு நினைவில் வந்துவிடும்.
இப்படி எத்தனையோ தமிழ்ப் பாடல்களை, தமிழிசையை வளர்க்க நாடகங்கள் பெரிதும் உதவின. இவை அந்ததந்தக் காலத்துக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்தன.
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் எளியோர்க்கும் புரியும் வண்ணம் இசை அமைய வேண்டும் என்பதால், நாடகங்களில் தமிழ் முழக்கம் முழுதாய் நிறைந்தது. நாடகக் கலையை வளர்த்த எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரின் அமுத கானத்தைக் கேட்கவே நாடகக் கொட்டாய்களில் மக்கள் வெள்ளம் குவிந்ததுண்டு. குறிப்பாக, இசை ஏதோ மேட்டுக்குடி மக்களுக்கானது என்ற எண்ணத்தை விதைத்திருந்த காலத்தில், மேட்டுக்குடி மக்களையும் சாதாரண நாடகக் கொட்டாய்களுக்கு வரவழைத்தவர் எஸ்.ஜி.கிட்டப்பா. அவரது சுண்டியிழுக்கும் குரல், மைக் செட் இல்லாமல் பல காத தூரத்துக்கு மக்களின் செவிகளில் இசையைப் பாய்ச்சி இழுத்து வந்தது. வள்ளி நாடகத்தில் காயாத கானகத்தே என்று கிட்டப்பா பாடிய தமிழிசைக்கு மயங்காதவர் உண்டோ? அன்றைய காலத்தில் காயக சிரோன்மணியாக வலம் வந்த ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், கிட்டப்பாவின் நாடகக் கொட்டாயில் முதல் வரிசையில் நின்று கேட்டு மயங்கினாரென்றால், நாடகத்தின் வலிமையை என்னென்பது?!
ராமநாடகம் போன்றே, அக்காலத்தே புகழ்பெற்று விளங்கியது நந்தனார் சரிதம் நாடகம். வேடன், வேலன், விருத்தன் என அனைத்திலும் நடித்து கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப பாடல்களைப் பாடி மேடைகளில் வெளுத்துக் கட்டியவர்கள் கிட்டப்பாவும் சுந்தராம்பாளும். நந்தனார் சரிதம் நாடகமும் இதற்குச் சற்றும் குறைவின்றி மக்களின் ஆதரவைப் பெற்றதே!
நாடகங்களை நடத்துவதற்கென்று, கூத்தர், பாணர் ஆகியோரை தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன. இவர்கள் இசையில் வல்லவராகத் திகழ்ந்தனர்.
நாடகங்களில் சில மரபுகள் உண்டு. கட்டியக்காரன் இல்லாத சரித்திர நாடகம் இல்லை. சபையோர்க்கு இவர் வருகின்றார் என்று அறிவிக்கும் அறிவிப்பாளன் கட்டியக்காரன். பெரும்பாலான நாடகங்களில் விநாயகர், கலைமகள், மோகினிராஜன், மோகினி போன்றோரெல்லாம் நாடகத்தின் துவக்கத்தில் வருவார்கள். இந்த நாடகங்கள் வசனம், விருத்தம், கீர்த்தனம் என மூன்று அமைப்புகளைக் கொண்டிருந்தன. எல்லா நாடகங்களுமே இன்றைய காலத்தைப் போல் வெறும் வசனம் மட்டுமே கொண்டிருக்கவில்லை. கதாபாத்திரங்கள் இடையிடையே கீர்த்தனம் செய்வர். விருத்தங்களின் மூலம் முன்னர் நிகழ்ந்ததைச் சொல்வர். இந்த நபர் இந்த சம்பிரதாயத்துடன் வருகிறார் என்று அறிவிக்கும்படி கீர்த்தனங்களாய் அமைவது உண்டு. கட்டியங்காரன் நிகழ்ச்சிகளைச் சொல்லும்வகையில் பாடல்களாய்ப் பாடுவதும் உண்டு.
நாடக சம்பிரதாயத்தில் கீர்த்தனங்களுக்கு தரு என்று பெயர். சிந்து என்றும் கூறுவர். இந்த வசனம், கீர்த்தனம், விருத்தங்களில் மக்களின் வழக்குச் சொற்கள் அதிகம் கலந்திருக்கும். அதுதான் இவற்றின் வெற்றி. இந்த வகையில், குறவஞ்சி நாடகங்கள் அக்காலத்தே பிரபலமாகத் திகழ்ந்திருக்கின்றன. திரிகூடராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சியும் இவ்வகையில் தமிழிசைக்கு பலம் சேர்த்த குறவஞ்சி நாடகமே!
தமிழ்ப் பாடல்களால் நிறைந்த நாடகங்கள் பெரும்பாலும் தெருக்கூத்து வகையைப் போல், எளியோரைக் கவர்ந்தவையாக இருந்திருக்கின்றன.
அக்காலத்துப் பேச்சுநடை, பழமொழிகள், பழங்காலப் பொருள்களைப் பற்றிய செய்திகளும் பாடல்களிலே இருந்ததால், இவை வெறுமனே துதிப் பாடல்களாக அமையாமல் வாழ்க்கைப் பாடல்களாக அமைந்தன.
தமிழிசை துலங்கும் நாடகங்கள் பழங்காலம் முதற்கொண்டே மேடையேற்றப்பட்டு வந்தாலும், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர்
தஞ்சை நாயக்கர் காலத்தில் மீண்டும் உத்வேகம் கொண்டு புதிது புதிதாக வலம்வந்தன. அருணாசலக் கவியால் இயற்றப் பெற்ற மதன சுந்தரப் பிரசாத சந்தான விலாசம் என்ற நாடகம், நாராயண கவி என்பார் இயற்றிய பாண்டிய கேளீ விலாச நாடகம் ஆகியவை தஞ்சை நாயக்கர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இயற்றப்பட்டுள்ளன.
மதன சுந்தரப் பிரசாத சந்தான விலாசம் என்பது, மதன சுந்தரேசராகிய சிவபெருமானின் திருவருளால் பெற்ற குழந்தைகளின் விளையாட்டைச் சொல்லும் நாடகம் என்ற பொருளில் அமைந்தது. மதன சுந்தரேசரைக் குல தெய்வமாக உடைய சோழ மன்னன் ஒருவனின் பிள்ளைகள் நான்கு பேர் பலவிதமான விளையாடல்களைச் செய்வதும், சிவபெருமானை நோக்கி பக்தி செய்வதும், சோழனின் பிரார்த்தனைக்கு இரங்கி சிவபெருமான் எழுந்தருளி அந்தப் பிள்ளைகளுக்கு நலன்கள் பல அருள்வதுமாகிய செய்திகள் இந்த நாடகத்தில் கூறப்பட்டிருக்கும்.
இந்த சோழன்தான் என்று குறிப்பிடாமல், யாரோ ஒரு சோழனாக சோழேந்திரன் எனும் பெயரில் இவன் குறிப்பிடப்படுகிறான். சேரன், பாண்டியன், கொங்கு நாட்டரசன், கேரள நாட்டு அரசன் என நான்கு பேரின் புதல்வியரை மணந்து, நான்கு புதல்வர்களைப் பெற்று அவர்களுடன் சேர்ந்து விளையாடுகிறான் சோழேந்திரன்.
அப்போது, முதலில் கழற்சிக்காய் விளையாட்டைத் தொடங்கினர். எண்களை எண்ணி ஒன்றெனில் தெய்வம், இரண்டெனில் சக்தியும் சிவமும், மூன்றெனில் மும்மூர்த்திகள், நான்கு எனில் நால் வேதங்கள், ஐந்து எனில் ஐம்பூதங்கள், ஆறு எனில் சாத்திரங்கள் என… இவ்வாறாக எண்களை வைத்து பாடல்கள் இசைக்க விளையாடுகிறான். பின்னர் கழற்சிக்காய் ஊசல் என விளையாட்டு. பந்து அடிப்பது, குதிரைப்பந்து, பந்தை வீசுவதும் பிடிப்பதுமான விளையாட்டு, கிட்டிப் பந்து, கிட்டியினால் பந்தை அடிப்பது மற்றவர் எடுப்பது, பின்னர் பாண்டி விளையாட்டு… சில்லை வீசிக் காலால் ஏற்றி விளையாடுவது. பின் உப்புக்கோடு, நாலுமூலைத்தாச்சி, கண்ணாமூச்சி என விளையாட்டு தொடர்கிறது. பின்னர் நால்வரும் சேர்ந்து கொப்பி தட்டிப் பாடி விளையாடுவது. இது முடிந்தவுடன் மதன சுந்தரேசரைப் புகழந்து பாடுவது…
இவ்வாறு குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்து மகிழ்ந்த அரசன், பெருமானை பிரார்த்தனை செய்து, இவர்களுக்கு தீர்க்காயுளும் மற்ற நலன்களும் கிட்ட வேண்டும் என்று வேண்ட, அவன் பக்திக்கு இரங்கிய பரமன் காமசுந்தரி அம்பிகையுடன் தோன்றி வரம் அருள்கிறான். இவ்வாறு இந்த நாடகம் முடிவடைகிறது.
கணபதி காப்புடன் தொடங்குகிறது இந்த நாடகம். பின்னர் ஹரிகதா போன்று, கதாசங்கிரகம் என்ற பெயரில் முன்கதைச் சுருக்கமாக சொல்லப்படும். கதை சொல்பவர்கள் கதை முழுதும் அமையும் ஒரு பாடலைப் பாடுவார்கள். அதை நிரூபணம் என்று சொல்வார்கள். இதே பாணியில்தான், கோபாலகிருஷ்ண பாரதியார் நொண்டிச் சிந்தில் கதைச் சுருக்கத்தை “பழனமருங்கணையும்” என்ற பாடலின் வழி அமைத்திருக்கிறார். இந்த அகவல் பாவின் முடிவில், இந்த நாடகம், சரபேந்திர மன்னனின் குமாரன் சிவாஜி ராஜேந்திரன் உத்தரவுப்படி அருணாசலக் கவியால் இயற்றப்பட்டது என்ற செய்தி வெளியிடப்படும்.
விநாயகர் காப்பு விருத்தமாகவும், கதாசங்கிரகம் அகவலாகவும், கட்டியங்காரன் வருகை விருத்தமாகவும் அமையும். பின்னர் சிந்து. கல்யாணி ராகத்தில் ஆதி தாளம் அமைய, பல்லவி மற்றும் சரணத்துடன் பாடல் அமையும். விநாயகர் வருகையை இந்துஸ்தானி சேர்ந்த கமாஸ் ராகத்தில் ஐங்கரர் வந்தாரே என்ற பல்லவியுடன், சங்கரி கிருபாகரி தவத்தினால் பெற்றெடுத்த சச்சிதானந்த மய நித்யகல்யாண குண — ஐங்கரர் வந்தாரே… என்று பாடல் தொடர்கிறது.
விளையாட்டுப் பாடல்களில், நாதநாமக்கிரியை, தோடி, மோகனம், பந்துவராளி, சௌராஷ்டிரம், மத்யமாவதி, மாஞ்சி, ஆனந்தபைரவி, புன்னாகவராளி என இந்தப் பாடல்கள் அமைந்த ராகங்களின் பட்டியல் நீள்கிறது.
பாண்டிய கேளீ விலாச நாடகத்தில் பாண்டிய மன்னனொருவன் தன் மனைவியுடன் இன்ப விளையாடல் புரிவதும், ஒரு பூங்காவுக்குச் சென்று அங்குள்ள மலர்களையும் பறவைகளையும்கண்டு களிப்பதும், அப்போது இரண்டு ரத்தின வியாபாரிகள் தம்மிடம் இருந்த மணிகளையும் அணிகளையும் காட்ட, அவற்றில் விருப்பமானதை அரசன் வாங்குவதும், பூசாரிகள் பின்னர் குறி சொல்வதும் என நாடகம் எளிமையாகத் திகழ்கிறது. நாராயண கவி என்பாரின் தமிழ் இங்கே கொஞ்சி விளையாடுகிறது. இதிலும் கதாசங்கிரகம் என்ற கதை கூறல், கட்டியங்காரன் வருகை, விநாயகர் வருகை, இயற்கை வருணனை, வியாபாரிகள் வருகை, அணிகளின் அழகை வர்ணித்தல், பின்னர் பூசாரி வருதல், முருகனை வேண்டல், அன்னை மீனாட்சியை வேண்டல், குறி சொல்லல் என அனைத்துக்கும் பாடல்களும் அவற்றுக்கேற்ற ராகங்களும் அமைந்து பூரணமாய்த் திகழ்கிறது.
தற்போதெல்லாம் நாடகங்கள் நகைச்சுவையையும் டைமிங் காமெடியையும் மையமாக வைத்து உருவெடுத்துவிட்டன. நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழிசையை மையமாக வைத்துத் தோன்றிய நாடகங்கள் இன்று திரைப் படங்களாக உருமாற்றம் பெற்றுவிட்டன. இருப்பினும் தமிழிசை வளர, மீண்டும் அருணாசலக் கவிராயரையும் நந்தனாரையும், கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் நடக்கும் கருத்துப் பரிமாறல்கள் இவை எல்லாமும் கலந்த இது போன்ற நாடகங்களை இனியும் பாடுவது தேவை. அவை வெற்றி பெற்று, மேடைக் கச்சேரிகளில் பாடப்பட்டால் தமிழிசை ஊக்கமும் உரமும் பெறும்.
– செங்கோட்டை ஸ்ரீராம்
(தினமணி இசை விழா மலர் 2012க்காக எழுதப்பட்ட கட்டுரை)
சொற்சுவை பொருட்சுவை தமிழ்ச்சுவை: நண்பா நந்தலாலா.. இது உன் சிறப்பு!
தமிழ்ச் சொற்சுவை உள்ளத்தே புகுந்து உணர்விலே ஒன்றி, கண்களில் நீர் கசியும் போதில்… அடடா! அனுபவித்தவர்களுக்கே அதன் தரமும் சுவையும் புரியும். அற்றை நாளிலும் இற்றை நாளிலும் அடியேன் நாடுவது நல்ல நண்பர்களின் துணையை!
கவிஞர் நந்தலாலா-நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவருடன் பேசிக் கொண்டிருந்தாலே போதும்… கவிச்சுவையும் தமிழ்ச் சுவையும் பண்டை இலக்கிய வாழ்வின் சுவையும் ஒருங்கே உளத்தில் புகும்.
ஆறேழு வருடங்களுக்கு முன்னர் பொதிகை-தொலைக்காட்சியில் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கின்றோம். அப்போதும் அச்சுவை பருகி மகிழ்வேன் யான்.
இன்று காலை… பொதிகையில் நண்பர் நந்தலாலா சொல்லின் சுவையை தனிமையிலே எடுத்துச் சொன்ன வண்ணம் இருந்தார். கேட்டுக் கொண்டிருந்தேன் எனை மறந்து.
அற்புதமான நினைவாற்றல் அவருக்கு. காளமேகத்தின் சிலேடையை தொய்வின்றித் தொகுத்தளித்தார்.
சிறுவயதில் சொல்விளையாட்டு எங்களுக்கும் அத்துபடி. எல்லாம் கிராமங்களில் பிறந்து, வளர்ந்து, நல்லோரிடம் தமிழ் படித்து பழகியிருக்க வேண்டும்… அந்த வாய்ப்பு அடியேனுக்குக் கிடைத்தது யாம் செய்த புண்ணியம்.
கவிஞர் நந்தலாலா சொன்ன ஓரிரு சொற்சுவையைக் கோடிட்டுக் காட்டாமல் இருந்தால் எப்படி?
அவருடைய சிறுவயதில் பெரியவர்கள் கேட்பார்களாம்… அந்தக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லால் பதில் தரவேண்டும். இதுவும் ஒரு விளையாட்டு!
பெரியவர் கேட்பாராம்… “இலங்கை அழிந்ததேன்? இரவி மறைந்ததேன்?” இதற்கான ஒற்றைச் சொல் பதில் – “இராமன் தாரத்தால்”! அதெப்படி? இலங்கை அழிந்தது – இராமன் தாரத்தால்! இரவி மறைந்தது – இரா மந்தாரத்தால்!
இன்னொன்று..
அக்ரஹாரம் கெட்டதேன்? விவசாயம் அழிந்ததேன்?
இதற்கான பதில்… “பார்ப்பான் இல்லாமையால்!” பார்ப்பு எனும் வேதமோதும் வேதியன் இல்லாமல் அக்ரஹாரங்கள் கெட்டன. விவசாயத்தைப் பார்ப்பவன் இல்லாமல் அதுவும் அழிந்துவருகிறது!
தனிமையைப் பற்றிச் சொன்ன நந்தலாலா, ஒரு கவிதை நயத்தைச் சொல்லி விடைபெற்றார்…
இக்பால் சாகும்வரை உன் பிணத்தை நீதான் சுமக்க வேண்டும்!
– உள்ளத்தில் உழன்றுகொண்டிருக்கிறது இந்த வாசகம்!




