ஜப்பானிய பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்

அடடே... அப்படியா? பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
jappani - 2026

கும்பகோணத்தில் உள்ள மோதிலால் தெருவில் வசித்து வருபவர் வசந்தன். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் நாட்டில் ஆராய்ச்சி படிப்பு படித்துவிட்டு அங்கு வேலை செய்து வந்தார்.

அப்போது, முகநூல் வழியாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் மேகுமி என்ற பெண் அறிமுகமானார். அதன் பின்னர் அவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது.

அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். பின்னர் இருவீட்டாரின் பூரண சம்மதத்தில் தமிழ் பாரம்பரியத்துடன் இன்று கும்பகோணத்தில் திருமணம் நடைபெற்றது.

ஆனால் மேகுமியின் பெற்றோர் வரமுடியாத சூழ்நிலையில் அவரது மாமா கலியாணத்தை நடத்திவைத்து பெற்றோரின் ஸ்தானத்தில் சடங்குகள் நடத்தினார்.
இத்திருமணத்தில் மணமகளின் தங்கை, நண்பர்கள் உள்பட பலர் தமிழ் கலாச்சாரப்படி வேட்டி புடவைகள் அணிந்து திருமணத்துக்கு வந்த மக்கள், உறவினர்களை வரவேற்றது மகிழ்ச்சியை அளித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.