விநாயகர் சதுர்த்தி உலகெங்கும் கோலாகலமாக கொண்டாட்ப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும். இவ்வருடம் விநாயக சதுர்த்தியானது வரும் திங்கட்கிழமை (2/9/2019) வருகிறது.
இந்நிலையில் நாட்டில் பல்வேறு இடங்களில் விதவிதமான அளவில் மாறுபாடு கொண்ட விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. மும்பையில் இந்நிகழ்வு ஒரு பெரும் விழாவாகவே கொண்டாடப்படும். அதிலும் லால்பாக்சா ராஜா வில் வைக்கப்படும் விநாயகர் சிலையும், கொண்டாட்டங்களும் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும்.
இன்று விநாயகர் சதுர்த்திக்கு முன்பு இவ்வாண்டிற்கான விநாயகர் சிலை முதல் பார்வைக்கு திறக்கப்பட்டது சந்திரயான் 2 இன் கருப்பொருளைக் கொண்டு, விண்வெளியின் பின்னணியில் இந்த முறை விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது, அந்த உருவத்தை சுற்றி பல போலி விண்வெளி வீரர்கள் உள்ளனர்.
லம்பாக்சா ராஜா மும்பை நகரில் மிகவும் பிரபலமான சர்வஜனிக் கணபதி பந்தல்களில் ஒன்றாக கருதப்படுகிறார். கணேஷ் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் மக்கள் லால்பாச்சா ராஜா தரிசனத்திற்காக மும்பைக்கு வருகிறார்கள். திரைப்படங்கள் மற்றும் பேஷன் உலகில் இருந்தும் மிகப் பெரிய பிரபலங்கள் சதுர்த்தியின் போது பந்தலைப் பார்வையிடுகின்றனர்.
அமிதாப் பச்சா, அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் முதல் அஜய் தேவ்கன், கஜோல் மற்றும் பிரியங்கா சோப்ரா வரை பல பிரபலங்கள் கணேஷ் சதுர்த்தியின் கொண்டாட்டங்களின் போது வருகை தருவார்கள் இதை தன் வாழ்வின் பாக்கியமாக கொள்கிறார்கள்.
#WATCH Mumbai: First look of Ganpati idol at Lalbaugcha Raja was unveiled, today, ahead of #GaneshChaturthi. #Maharashtra pic.twitter.com/yntrZRuqht
— ANI (@ANI) August 30, 2019