டிக்டாக்- அடுத்த கட்டம்! இனி டூயட் பாடுவது மட்டுமல்ல… நடிகையருடன் ஆடவும் செய்யலாம்!

Published:

tiktok actress - 2026

இப்போது டிக்டாக் விதவிதமாக வந்துவிட்டது. டிக் டாக் செயலியில் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சினிமா பாடல்களைப் பாடுகின்ற பாத்ரூம் பாடகர்கள் இப்போது டிக் டாக் செயலி மூலம் உலக ஃபேமஸ் ஆகி வருகின்றனர். திரையில் காணும் சினிமாப் பாடல்களுக்கு பின்னணி இசையுடன் தங்கள் குரல்களைச் சேர்த்துப் பாடி வீடியோ வெளியிட்டு வந்தனர். அதில் தங்கள் குரல் பாடல்களாக ஒலிப்பதைக் கேட்டு மகிழ்ந்தனர்.

இதன் அடுத்த கட்டமாக இப்போது சில வீடியோக்கள் வரத் தொடங்கியுள்ளன. பாடல் போய் இப்போது ஆடல்!

ஹீரோ, ஹீரோயினுடன் டூயட் பாடுவது, இணைந்து ஆடுவது என்று, அடுத்த பரிமாணத்தை நோக்கி நகர்கிறது வீடியோ பகிரும் ஆப்ஸ் கலாசாரம்!

தொழில்நுட்பத்தின் பரிமாணமாக திரையில் டூயட்டுக்கு ஆடுகின்ற இது போன்ற வீடியோக்கள் இப்போது வைரலாகி வருகின்றன.. இதுவரை கனவில் மட்டுமே ஹீரோயினுடன் கட்டிப் பிடித்து டான்ஸ் ஆடிவந்த இளைஞர்களுக்கு… அந்தக் கனவுக் கன்னி இப்போது ஆப்ஸ்ஸில் சாத்தியமாகிவிடவே… அடுத்து ஏக குஷியில் இருக்கலாம்!

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இது அடுத்து எங்கு போய் முடியுமோ என்று அச்சப்படுகின்றனர் சமூக ஆர்வலர்கள்!

Related articles

Recent articles

spot_img