‘அது’ எல்லாம் வேணும்… ஆனா திஹார் மட்டும் வேணாம்..!

அடடே... அப்படியா? இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
chidambaram behind bars - 2026

‘தனக்கு 74 வயது ஆவதால், தயவுசெய்து திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம்’ என்று சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் செய்த வாதம் குறித்து இப்போது பலத்த விவாதங்கள் எழுந்துள்ளன.

ப.சிதம்பரத்தின் இந்த வாதம் குறித்து சமூக வலைத்தளங்களில் கிண்டலும் கேலியும் செய்யப் பட்டு வருகிறது. பலர் ப.சிதம்பரத்தின் முந்தைய காலகட்டத்தை முன்னிறுத்தி விமர்சித்து வருகின்றனர்.

கனிமொழியை திகாருக்கு அனுப்பிய போது என்ன சொன்னாரோ.. ஆ.ராசா திஹார் சிறைக்குச் சென்ற போது ப.சிதம்பரம் என்ன சொன்னாரோ அதுதான் இப்போது அவருக்கு… “சட்டம் தன் கடமையைச் செய்யும்” ! என்று திமுக.,வினரே இந்த நேரத்தில் கருத்துப் பதிவுகளை செய்து வருகின்றனர்.

வெளி நாட்டு சொத்து வேணும்..
கொள்ளை அடித்த பணம் வேணும் ,,,
உள்துறை அமைச்சர் பதவி வேணும்..
இந்திரணி முகர்ஜி கொடுத்த பணம் வேணும் ,,
ஆனால் திகார் ஜெயில் மட்டும் வேண்டாம் என்ன நியாயம்? – என்று கேள்வி எழுப்புகின்றனர் பலர்.

உள்துறை அமைச்சராக இருந்து ப.சிதம்பரம் என்ன செய்தாரோ அந்த கர்மா இப்போது அவருக்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

இதற்கு இடையில், ப.சிதம்பரத்தை காவலில் பார்த்த அவரது மனைவி நளினி சிதம்பரம், அவருக்கு கம்ப ராமாயணத்தை படிப்பதற்குக் கொடுத்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. சுந்தரகாண்டம் படித்து, தீவினை போக்கிக்கொள்ள சிதம்பரம் முயற்சி செய்யட்டும் என நளினி அதைக் கொடுத்ததாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.