எஃப்ஐஆர்’-ல் 3 ஜோடிகளுடன் விஷ்ணு!

சினி நியூஸ் சினிமா
vishnu vishal - 2026

தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களையும், கமர்சியல் திரைப்படங்களையும் ஒருசேர கலந்து தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால்.

fir - 2026

இவர் அடுத்ததாக நடிக்கும் படம் எப்.ஐ.ஆர். இதில் எஃப்.ஐ.ஆர் என்பதற்கு கீழாக பைசல் இப்ராஹிம் ராசித் என என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

fir 1 - 2026

சுஜாதா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அஷ்வந்த் இசையமைக்கிறார். கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

fir 2 - 2026

ஏற்கனவே விஷ்ணு விஷால், காடன், இன்று நேற்று நாளை 2 மற்றும் பெயரிடப்படாத 2 படங்கள் என அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.