திஹார் சிறையில் பிறந்த நாள் கொண்டாடுகிறார் ப.சிதம்பரம்!

அடடே... அப்படியா? இந்தியா உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்
chidambaram pc - 2026

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிதம்பரத்துக்கு வரும் செப்டம்பர் 16ஆம் தேதி 74 ஆவது பிறந்தநாள் வருகிறது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், இந்த முறை தனது பிறந்தநாளை சிறையில் கொண்டாட வேண்டி வரும். பொருளாதாரக் குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் திகார் சிறையில் ஏழாம் எண் சிறை வளாகத்தில் அடைக்கப்படுவார்கள்.

அதன்படி சிதம்பரமும் ஏழாம் எண் சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனவே இந்த முறை அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது, நீதிமன்ற அனுமதியுடன் திஹார் சிறையில் கழியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.