ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு கொண்டு வருவது உறுதி!

Published:

zakirnaik - 2026

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றிருந்த போது அங்கே மலேசிய பிரதமர் மகாதிர் முகமதுவை சந்தித்துப் பேசினார். அப்போது ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கி உள்ளார்.

மேலும் பயங்கரவாதப் பிரச்னை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவரிடம் எடுத்துரைத்துள்ளார். அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், மகாதீர் முகமதுவிடம் தொலைபேசியில் பேசினார். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் குறித்து மோடி அவருக்கு விளக்கம் அளித்துள்ளார்.

பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளதால், கடந்த 2016ஆம் ஆண்டு ஜாகிர் நாயக் மலேசியாவுக்கு தப்பி ஓடினார்.

இதை அடுத்து, ஜாகிர் நாயக்கை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கும் படி மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் நிலையில் பேசுவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்!

இருதரப்பு பிரச்னைகள் வர்த்தகம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியுள்ளனர். எனவே ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு கொண்டு வருவது உறுதியாகியுள்ளது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Related articles

Recent articles

spot_img