கூகுள் பே மூலம் ரூ 96,000 இழந்த நபர்!

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
google pay - 2026

கூகுள்பே சேவையைப் பயன்படுத்திய மும்பையைச் சேர்ந்த நபரின் வங்கி கணக்கில்இருந்து 96,000 ரூபாயை ஆன்லைன் கொள்ளையர்கள் சுட்டுள்ளனர். தற்பொழுது இந்த அதிர்ச்சி தரும் செய்தி கூகுள் பே பயனர்களைக் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது

கூகுள்பே சேவை இந்தியாவில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக BHIM மற்றும் Paytm போன்ற சேவைகளை விட, இந்தியப் பயனர்கள் கூகுள் பே சேவையை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரபலமான கூகுள் பே சேவையிலும் கூட ஆபத்துகள் உள்ளது என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது

மும்பையைச் சேர்ந்த, 31 வயதான தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், கடந்த வாரம் தனது வீட்டின் மின்சார பில் தொகையைச் செலுத்துவதற்காகக் கூகுள் பே சேவையைப் பயன்படுத்தியுள்ளார். கூகுள் பே சேவையில் உள்ள ‘எலக்ட்ரிக் பில்’ என்ற பிரத்தியேக சேவையை அவர் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பே சேலையில் உள்ள எலக்ட்ரிக் பில் ஆப்ஷனை பயன்படுத்தி, அந்த நபர் தனது பில் தொகையை செலுத்த முயன்ற போது எதிர்பாராதவிதமாக அவர் செய்த பரிவர்த்தனை தோல்வி அடைந்தது. ‘Transaction Pending’ என்ற செய்தி அவருக்கு கூகுள் பே செயலியில் வந்துள்ளது.

இதைப் புகார் கொடுப்பதற்காக, கூகுள் பே சேவையின் ‘கஸ்டமர் கேர் எண்ணை’ கூகுளில் சர்ச் செய்துள்ளார். கூகுள் சர்ச் இல் இருந்து எடுக்கப்பட்ட போலி கஸ்டமர் கேர் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தனது புகாரைத் தெரிவித்திருக்கிறார்.

கூகுள் பே வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி போல பேசிய ஆன்லைன் திருடர்கள், கூகுள் பே சேவையில் இப்படியான பிரச்சனைகள் நடப்பது இயல்பு என்றும், இதை உடனே சரி செய்வதாகவும் கூறி, அவர் மொபைல் எண்ணிற்கு ஒரு லிங்க்-கை அனுப்பியுள்ளனர்

ஆன்லைன் கொள்ளையர்கள் அனுப்பிய அந்த ‘மெசேஜ் லிங்க்’ கிளிக் செய்த அடுத்த சில நிமிடங்களில், அந்த நபரின் அக்கௌன்ட்டில் இருந்து ரூ. 96,000 எடுத்து விட்டார்கள். தனது அக்கௌன்ட் இல் இருந்து ரூ.96,000 ரூபாய் திருடப்பட்டது தெரிந்த உடனே, அருகிலுள்ள மும்பை காவல்துறையினரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.



Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.