என்ன..?! உதயநிதி ஸ்டாலின் அண்ணனா?! செந்தில்பாலாஜியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை நகைச்சுவை லைஃப் ஸ்டைல்
annan udayanidhi - 2026

கழக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன்… – என்று கூறி ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார் செந்தில் பாலாஜி.

திமுக., இளைஞரணி செயலாளரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதியை, அண்மைக் காலத்தில் அதிமுக.,வில் இருந்து பின் அமமுக.,வுக்கு மாறி, அமமுக.,வில் இருந்து திமுக.,வில் இணைந்து, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரும் ஆகிவிட்ட செந்தில் பாலாஜி, அண்ணன் என்று குறிப்பிட்டுள்ளது டிவிட்டரில் பரபரப்பாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.

இதற்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அவற்றில் சில கருத்துகள்…

https://twitter.com/SenthilbalajiV/status/1174742926343065600

சின்ன அண்ணன் இன்பநிதியை கேட்டதாக சொல்லவும் !
உனக்கு உதயநிதி அண்ணன் னா ?
கேவலம். சின்னதத்தி உங்களுக்கு அண்ணனா?
உங்களுக்கு அவர் அண்ணாவா? செனாபானா…
உனக்கு அண்ணனா யா ????
சோத்துல உப்பு சேர்த்து சாப்பிடுங்கள்
வருங்காலத்தில் இன்பாவை கூட அண்ணன் என்று தான் அழைப்பார்கள் போல…
நீங்க MLA வா இருக்கும் போது அவர் பால் குடிச்சிட்டு இருந்தார்
அரசியலுக்காக எவ்வளவு கேவலமாக நடக்குறீங்க.????
அடேய் முடியல ஜால்ட்ரா போதும் டா
உதய் உங்களை விட இளையவர். ‘ சகோதரர் ‘ என்று பயன்படுத்துங்கள்
ஜால்ரா சத்தம் கருர் வரை கேக்குது

https://twitter.com/Balagbooma1/status/1175261619699339264

ஏற்கெனவே உதயநிதியை உதயண்ணா என்று குறிப்பிட்டு, அண்ணாத்துரை படத்தைப் போல் சித்திரித்து, சமூகத் தளங்களில் படம் வைரலானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.