காப்பான்… விசிலடிச்சான் குஞ்சுகளின் தமிழைப் படித்து கதி கலங்கிய காவல் ஆய்வாளர்!

Published:

tamil 1 - 2026

தமிழை இனி யார் ‘காப்பான்’..? சூர்யா ரசிகர்களால் ஷாக்கான இன்ஸ்பெக்டர்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் நேற்று திரைப்படத்திற்கு சென்ற கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேண்டு வாத்தியம் முழங்க ஊர்வலமாக சென்றனர்.

அவர்களை புவனகிரி காவல் ஆய்வாளர் Ambethkar காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, “முன் அனுமதி வாங்காமல் இதுபோன்று ஊர்வலம் செல்லக் கூடாது, திரையரங்கில் பேனர் வைக்க கூடாது என்று அறிவுரை கூறியதோடு, 
இனிமேல் அப்படி செய்யமாட்டோம் என கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

tamil2 - 2026

கடிதம் எழுதிய 6 பேரும் தமிழை தப்பும் தவறுமாக எழுதிக் கொடுத்துள்ளனர்.

அதில் ஒரு மாணவன் ஆய்வாளர் என்பதை ‘ஆவ்யாளர்’னு எழுதிருக்கான். 
“மனச திடப்படுத்திக்கிட்டுத்தான் அதை படிச்சேன். படிக்கும்போது துக்கம் தொண்டையை அடைச்சது என… என தனது பேஸ்புக் பக்கத்தில் அம்பேத்கர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

இந்த கடிதம் எழுதிய 6 பேரும் கல்லூரி படிக்கின்ற மாணவர்கள். இப்படியே நிலைமை போனால் யார் ‘காப்பான்’ இவர்களையும் இவர்களின் தமிழையும் …?” என்று வினவியுள்ளார் ஆய்வாளர் அம்பேத்கர்.!!

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
tamil 3 - 2026

இது குறித்து பல்வேறு கருத்துகள் சமூகத் தளங்களில் பகிரப் படுகின்றன. கல்லூரி மாணவர்களின் கல்வி(குறிப்பாக தமிழறிவின்) தரம் வருத்தமும் வேதனையும் அளிக்கிறது என்றும், நாடாளுமன்றத்தில் தமில் வாழ்க சொன்ன பரம்பரை. வாழ்க தமிழ் என்றும், 60 வருஷமா தமிழ் வளர்த்த லட்சணம் இதுதான் மரமண்ட தமிழா யோசிங்கடா என்றும் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஆவ்யாளர் என்ற சொல் மட்டுமல்ல மொத்த கடிதமுமே தப்பும் தவறுமாகத்தான் இருக்கின்றது. என்ன படிச்சாங்களோ எப்படித்தான் தேர்ச்சி அடைஞ்சாங்களோ. இவனுக எதிர்காலத்துல குடும்பத்த காப்பான்ங்களா…என்று கவலையுடன் விளிக்கின்றனர் சமூக வலைத்தளங்களில்.

Related articles

Recent articles

spot_img