
பிரதமர் நரேந்திர மோடி நடிகர் விவேக்குக்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மகாபலிபுரம் கடற்கரை குறித்து நேற்று கவிதை வெளியிட்டிருந்தார்.
இந்தியில் வெளியிட்ட அந்தக் கவிதையை அலைகடலே அடியேனின் வணக்கம்.. என்ற தலைப்பில் தமிழிலும் மொழிப்பெயர்ப்பு செய்து பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடியின் அந்த கவிதை வைரலானது.

அதனை பார்த்த நடிகர் விவேக், இயற்கையை வணங்குவது கடவுளை வணங்குவதற்கு சமம், ஏனெனில் இயற்கையே சர்வ சக்தியுடையது.. பெரியது.. மதிப்பிற்குரிய நரேந்திர மோடி ஐயா.. மகாபலிபுரம் கடற்கரை குறித்த உங்களின கவிதைக்காக நம் தேசத்தின் சார்பாக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

நடிகர் விவேக்கின் இந்த டிவிட்டை பார்த்த பிரதமர் மோடி, விவேக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இயற்கையின் மீதான மரியாதை என்பது நமது நெறிமுறைகளின் முக்கிய பகுதியாகும். இயற்கை தெய்வீகத்தன்மையையும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. மாமல்லபுரத்தின் அழகிய கரையோரங்களும் காலை அமைதியும் எனது சில எண்ணங்களை வெளிப்படுத்த சரியான தருணங்களை அளித்தன என தெரிவித்துள்ளார்.

இதேபோல் தனது கவிதையை பாராட்டி நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயனுக்கும் நன்றி கூறிய பிரதமர் மோடி, ஒரு துடிப்பான கலாச்சாரத்தை வளர்த்த உலகின் பழமையான மொழியில் என்னை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. தமிழ் மொழி அழகானது, தமிழ் மக்கள் விதிவிலக்கானவர்கள் என தெரிவித்துள்ளார்.
Saluting nature is saluting God..! Bcoz nature is the Almighty!! Great ! Hon @narendramodi sir! Thank you on behalf our nation, for your lovable poem on mahab ocean…! https://t.co/OT1jlCGutD
— Vivekh actor (@Actor_Vivek) October 20, 2019
Thank you @Actor_Vivek!
— Narendra Modi (@narendramodi) October 20, 2019
Respect for nature is a key part of our ethos. Nature manifests divinity and greatness.
The scenic shores of Mamallapuram and the morning calm provided perfect moments to express some of my thoughts. https://t.co/2hGCmcs9M8
Glad to be expressing myself in the world’s oldest language, which has nurtured a vibrant culture.
— Narendra Modi (@narendramodi) October 20, 2019
The Tamil language is beautiful, the Tamil people are exceptional. https://t.co/5qYL13NPo0