
ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் தங்கள் பிராத்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஆழ்குழாய் குழியில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் பிரத்யேக குழுவினர் சேலம், மதுரை, நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணி நடைபெறும் இடத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். அவர்களும் குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என பிராத்தித்து வருகின்றனர்.
சமூகவலைதளங்களிலும் பலரும் குழந்தை சுஜித்துக்காக பிராதித்து பதிவிட்டு வருகின்றனர்.
ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ட்விட்டரில் பல்வேறு தரப்பினரும் தங்கள் பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர். #savesurjeet, #prayforsurjith,#SaveSujith ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரண்டாகி வருகின்றன.