
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநா் பாரதிராஜா, தியாகராய நகா் கிருஷ்ணா தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
பாரதிராஜா இரு நாள்களுக்கு முன்பு இரவு, வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள தனது படுக்கை அறையில் தூங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த தனது ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐ-போன், பூஜை அறையில் இருந்த ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்..
இது குறித்து அவா், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனா். பாரதிராஜா வீட்டில் வேலை செய்யும் நபா்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அவா்களிடமும் விசாரித்து வருகின்றனா்