
ஊடகத்தினர், வழக்கறிஞர்கள், முக்கியப் பிரமுகர்கள் என பலரது வாட்ஸ் அப்களில் ஊடுருவி உளவு பார்த்ததாக இப்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் பலரது மொபைல் போன்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஸ்பைவேர்கள் இயங்கியதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிக்கையாளர்கள். சமூக செயற்பாட்டாளர்கள் உள்பட இந்திய பிரபலங்களின் செல்போனுக்கு இஸ்ரேலின் என்எஸ்ஒ சைபர் செக்யூரிட்டி நிறுவனம் வாட்ஸ் அப் சர்வர் மூலம் ஸ்பைவேர்களை அனுப்பி இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் பிரபல ஆங்கில ஊடகத்திடம் உறுதி செய்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இஸ்ரேலிய ஸ்பைவேர்களால் பிரபலங்கள் குறிவைக்கப்பட்டதாகவும், இந்த வாரம் பல இந்திய பயனாளர்கள் குறிவைக்கப்பட்டதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மே மாதம் வரை இஸ்ரேல் ஸ்பைவேர்களின் கண்காணிப்பில் இலக்காக இருந்ததாகவும் நம்பப்படுகிறது.
கடந்த செவ்வாய்கிழமை வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் இஸ்ரேலின் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான என்எஸ்ஓ மீது வழக்கு தொடுத்தது.
தனது மனுவில் 1400 வாட்ஸ் அப் பயனர்களுக்கு தீமை தரும் வைரஸை வாட்ஸ் அப் சர்வர் மூலம் அனுப்பியதாக குற்றம்சாட்டி உள்ளது. குறிப்பாக ஊடகவியலாளர்கள், அரசியல் நிபுணர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், 20 நாடுகளில் உள்ள மூத்த அரசு அதிகாரிகள் ஆகியோரை இலக்காக நிர்ணயித்து ஸ்பைவேர்களை அனுப்பியதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் தொடர்பு கொண்டவர்களில் தானும் ஒருவர் என்று WION பத்திரிகையாளர் சித்தாந்த் சிபல் ட்வீட் செய்துள்ளார். தொழில்நுட்ப மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தனது டுவிட் பதிவில் கூறியுள்ளார்.
இஸ்ரேல் நிறுவனம் , செல்போன் இயக்கத்தை கையகப்படுத்தி, அவர்களின் தகவல்கள், அழைப்புகள் மற்றும் பாஸ்வேர்டுகள் ஆகியவற்றை கண்டறிவதற்கு ஸ்பைவேர் தாக்குதலை நடத்த வைரஸ்களுக்கு கட்டளைகளை வழங்கி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது
Here is the good news. Whatsapp was able to raise the alarm of hacking and they promptly took measures–Technical & Legal. Having being approached by them, they suggested measures to be safe online.
— Sidhant Sibal (@sidhant) October 31, 2019