
நான் கலந்து கொள்ளாத நிகழ்ச்சியில் என் படத்தை பிரசுரிக்க வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததால் கழக தொண்டா்கள் கலக்கம்.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ” நான் சம்பந்தப்படாத, நான் கலந்து கொள்ளாத நிகழ்ச்சி பற்றிய நாளிதழ் அறிவிப்புகளிலோ, சுவரொட்டிகளிலோ, அழைப்பிதழ்களிலோ என் புகைப்படத்தைக் கழகத்தினர் யாரும் பயன்படுத்தக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.
பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர், கழகத் தலைவர் போன்ற நம் முன்னோடிகளின் புகைப் படங்கள்தான் இடம்பெற வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கூறிய இந்த கருத்துக்கள் தொண்டா்கள் (ஜால்ராக்கள்) மத்திய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.



