திருமண விழாவில் வாழை மரத்தை தொட்ட சிறுமி! மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

அடடே... அப்படியா? தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
current - 2026

கோவில்பட்டி அருகே திருமண விழாவுக்கு வந்த 8வயது சிறுமி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையைச் சேர்ந்தவர் பாலமுருகன், இவரது மனைவி கற்பகவல்லி. இவர்களது மகள் மாலினி(8). இவர்கள் கோவில்பட்டி அருகேயுள்ள சிவந்திபட்டியில் நேற்று நடந்த உறவினர் திருமணத்திற்காக வந்திருந்தனர்.

சிவந்திபட்டியில் திருமணம் நடைபெறும் மண்டபத்தில் அருகேயுள்ள கலையரங்கு பகுதியில் சிறுமி மாலினி விளையாடிக் கொண்டிருந்தார்.

அங்கு வாழைமரம் கட்டப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விளையாடும் போது சிறுமி மாலினி வாழைமரத்தை பிடித்த போது மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கியதில் சிறுமி தூக்கி வீசப்பட்டார்.

உடனே அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண விழாவுக்கு வந்த சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.