திருநங்கைகளை திமு க-வில் அதிகம் சேர்க்க திட்டம்; முக.ஸ்டாலின் அதிரடி.!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
MK SATALIN - 2026

திமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த பொதுக்குழுவில் மேடையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மலர்தூவி மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இந்த கூட்டத்தில் பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீக்கும், ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Therunagai 6 - 2026

கூட்டத்தில் திருநங்கைகளை தி.மு.க உறுப்பினர்களாகச் சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றம்!

இணையம் மூலம் தி.மு.க.வில் உறுப்பினர்களை சேர்க்க விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம்.

வெளிநாடு வாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினராகச் சேர்க்க விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம்
.
திருநங்கைகளை தி.மு.க உறுப்பினர்களாகச் சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம்.

therunangi - 2026

2020ம் ஆண்டுக்குள் தி.மு.க அமைப்பு தேர்தலை நடத்தி முடிப்பது என தீர்மானம்.

தி.மு.க இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயித்து தீர்மானம்.

வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும் என தீர்மானம்

tt 6 - 2026

இந்திய அரசியல் சட்டம் 70ம் ஆண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்து தீர்மானம்
.
அடிப்படை பண்புகளுக்கு ஊறு நேராமல் அரசியல் சட்டத்தை நிறைவேற்றக் கோரி தீர்மானம்

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.