சஞ்சீவ்க்கு அடித்த அதிர்ஷ்டம்! பெயிண்டர் ஆன இவர் வாழ்க்கை ஒண்டர் ஆனது எப்படி?

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
money - 2026

ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.

பெயிண்டரான இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வந்த தீபாவளி அன்று தனது மகனுக்கு உடம்பு சரி இல்லாததால் அவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார் சஞ்சீவ்.

வீட்டுக்கு திரும்பும் போது அங்கே தீபாவளி சிறப்பு லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருப்பதை பார்த்து அதில் இரண்டு லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார் சஞ்சீவ்.

lottary - 2026

வழக்கம்போல் தனது வேலைகளை பார்த்து வந்த சஞ்சீவ், வாங்கிய லாட்டரி ஷீட்டிற்கான வெற்றி எண் நேற்று அறிவிக்கப்பட்டதால் அதன் முடிவு காண சென்றிருக்கிறார். அதில் சஞ்சீவ் வாங்கிய ஒரு லாட்டரி ஷீட்டிற்கு 2.5 கோடி பரிசு விழுந்துள்ளது.

இதனால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய சஞ்சீவ் இந்த பணம் தனது குடும்ப வறுமையை போக்கும் என்றும், தனது குழந்தைகளின் படிப்பு செலவிற்கு உதவும் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.