பைக் மீது பாய்ந்த புலி…! இதயத்தை படபடக்க வைக்கும் வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
tiger youhs - 2026

ஜஸ்ட் மிஸ்…! நல்ல இருட்டில் காட்டு வழிச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவம் இது.

புதரில் மறைந்திருந்த ஒரு சிறுத்தைப் புலி திடீரென்று ஒரேயடியாக அவர்கள் மீது பாய்ந்தது. அந்நேரத்தில் பைக் வேகமாக சென்று கொண்டிருந்ததால் அந்தப் புலியின் குறி தவறியது .

இந்த எதிர்பாராத சம்பவத்தால் அந்த இளைஞர்கள் ஆடிப் போயினர். உடனே நிறுத்தாமல் படு வேகமாக அங்கிருந்து பைக்கில் பறந்தனர்.

பாய்ந்த புலியும் அவர்களை திரும்ப வந்து தாக்காமல் தன் வழியே சென்று விட்டது. இந்த திகில் வீடியோவை இந்தியன் வன இலாகா அதிகாரி சுஷாந்த் நந்தா ட்வீட் செய்துள்ளார்.

ஒரே கணத்தில் இந்த வீடியோ வைரல் ஆகி விட்டது. ஆனால் இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை.

அந்த வழியில் காரில் பயணித்தவர்கள் யாரோ இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்.

புதரில் நின்றிருந்த புலியை பார்த்து காரை நிறுத்தி வீடியோ எடுக்கும் போது இரு இளைஞர்கள் பைக் மீது அவ்வழியே சென்றார்கள். புலி அவர்கள் மீது பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பித்து உயிர் பிழைத்தார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.