
கணவன் மனைவி இருவருக்கு இடையே நடந்த சண்டையை விலக்கி விட சென்ற பக்கத்து வீட்டை சேர்ந்த கொத்தனார் ஒருவரை கணவன் வாயால் கடித்து குதறி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் எரிவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த செந்தில் – பாக்கியலட்சுமி தம்பதியினர் அடிக்கடி தங்களுக்குள் தகராறில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று
எப்போதும் போல் கடந்த வியாழன் அன்று இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர், இந்த முறை கடும் ஆத்திரத்தில் இருந்த செந்தில் மனைவியை தெருவில் விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாதவன் என்ற கொத்தனார் இருவருக்கு இடையே நடைபெறும் சண்டையை நிறுத்த சென்றிருக்கிறார்,
அப்போது அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த செந்தில் வடிவேலு படத்தில் வருவது போன்று கதவை உள்புறம் தாப்பாள் போட்டுவிட்டு மாதவனை கீழே தள்ளி உடம்பு முழுவதும் கடித்து குதறி இருக்கிறார்,
வலிதாங்கமுடியாமல் அலறிய கொத்தனார் மதவனை அக்கம்பக்கத்தை சேர்ந்தவா்கள் மீட்டு மயிலாடுதுறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப சண்டையை விலக்கிவிட சென்ற கொத்தனாரை கடித்து குதறிய செந்தில் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
.



