ஐயோ பாவம்… அந்த நீதிபதியால் அவமானப்பட்ட ‘அந்த’ சார்பு உதவி ஆய்வாளர்!

Published:

complaint - 2026

டிச.3 அன்று இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்து உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -1 என்ற நீதிமன்றத்தில் இராமநாதபுரம் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு சார்பு ஆய்வாளர் திருமதி. ஜெனிபா ராணி என்பவர் நீதிமன்ற பணிகளுக்காக காலை 10 மணி அளவில் வந்து உள்ளார்.

உரிய நேரத்தில் நீதிமன்றம் தொடங்கியதும், இராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -1 நீதிபதி திருமதி ஜெனிதா , CCIW சார்பு ஆய்வாளரை “உன்னை யார் என்னுடைய கோர்ட்க்கு வரச் சொன்னது. உடனே நீ வெளியே போ என்று கூறி , அங்கு நீதிமன்ற பணியில் இருந்த ஊழியர்கள் நான்கு பேரை அழைத்த நீதிபதி, “இவளை மூன்றாவது மாடியில் உள்ள நமது நீதிமன்றத்தில் இருந்து , கீழ்தளத்தில் உள்ள மெயின் கேட் அருகே விடுங்கள் என்று கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் , நீதிமன்ற ஊழியர்கள் மேற்படி சார்பு ஆய்வாளரை அழைத்து வரும் போது, மேற்படி சார்பு ஆய்வாளர் அவமானத்தில் கூனி குறுகி பெரும் குரல் எடுத்து , அழுது கதறியுள்ளார்…

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

அதன் அடிப்படையில் , சத்தம் கேட்டு தலைமை குற்றவியல் நீதிபதி அவர்கள் அந்த சார்பு ஆய்வாளரை நேரில் விவரங்களை கேட்ட நேரத்தில் சார்பு ஆய்வாளர் நீதிபதி முன்பாக நெஞ்சு அடைப்பதாகக் கூறி மயங்கி சரிந்துள்ளார்.

காவல் சார்பு ஆய்வாளர் இராமநாதபுரம் D பிளாக் பகுதியில் அமைந்து உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நீதித்துறை நடுவர் திருமதி.ஜெனிதா அவர்கள் காவல் சார்பு ஆய்வாளரிடம் அநாகரிமாக நடக்க காரணம் என்னவென்று விசாரித்த வகையில், மேற்படி நீதிமன்றத்தில் முன்பு (கடந்த 2013 ஆண்டுகளில் இருந்து) வணிக குற்ற புலனாய்வு பிரிவு சார்பாக நீதிமன்ற பணிகளை கவனித்து வந்தவர் முதல் நிலை காவலர் திரு.முருகன்.

அண்மைக் காலமாக காவலர் முருகன் என்பவர் வணிக குற்ற புலனாய்வு பிரிவு நீதிமன்ற பணிகளை சரி செய்வதில்லை என்று கூறப்படுகிறது. காரணம் நீதிபதி அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று கூட்டி வருவது, நீதிபதி அவர்களின் கார் டிரைவராக காவலர் பணிபுரிந்து வருவது என்று இருந்ததாக கூறப்படுகிறது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இதன் அடிப்படையில் காவலர் முருகன் நீதிமன்ற பணிகளிலிருந்து, வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்ட காவலர் முருகன் என்பவரை மீண்டும் நீதிமன்ற பணிகளுக்கு மாற்றம் செய்ய நீதிபதி அவர்கள் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் இராமநாதபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் -1 என்ற நீதிமன்றத்தில் வணிக குற்ற புலனாய்வு பிரிவு காவல்துறையினர் உள்ளே நுழையக் கூடாது என்ற அடிப்படையில் சார்பு ஆய்வாளர் அவர்களை நீதிமன்றத்திலிருந்து வெளியே துரத்தியதற்கான காரணம் என தெரிய வருகிறது.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் நீதிமன்றங்களில் உள்ள CCTV கேமிராக்களில் பதிவு ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

நீதிமன்றம் எண் -1 நீதிபதி திருமதி ஜெனிதா என்பவர் பல்வேறு நிலை அதிகாரிகளை வயது வித்தியாசம் பார்க்காமல் ஒருமையில் பேசுவது குறித்து பல்வேறு புகார்கள் பரவலாகக் கூறப்படுகிறது.

திருமதி ஜெனிதா இதற்கு முன் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் நடுவராகப் பணியாற்றியவர்

  • கா.குற்றாலநாதன், நெல்லை
    .
ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img