மனைவி பிரிந்த ஆத்திரம்; தந்தையை கொன்ற மகன்.!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை தமிழகம் புகார் பெட்டி
vettu 2 1 - 2026

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது67). இவருக்கு முருகன், லட்சுமணன், சேகர் என 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

பெருமாளின் 3-வது மகன் சேகரின் மனைவி சத்யா (35). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சேகரை பிரிந்து சத்யா தனியாக வசித்து வந்தார்.

dead bady 9 - 2026

தற்போது சத்யா வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

மனைவி தன்னுடன் வாழ்க்கை நடத்தாதற்கு தந்தை பெருமாள் தான் காரணம் என சேகர் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றிரவு தந்தைக்கும் சேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் தூங்க சென்றுள்ளனர். நள்ளிரவு தூங்கி கொண்டிருந்த பெருமாளை சேகர் அரிவாளால் தலை, கழுத்தில் பயங்கரமாக வெட்டினார்.

ARASED 10 - 2026

ரத்த வெள்ளத்தில் துடித்த பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பெருமாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

அங்கு சேகர் அரிவாளுடன் நின்றிருந்தார்.

இதுகுறித்து வெறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெருமாளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.