
நேற்று களியக்காவிளையில் பயங்கரவாதிகளால் காவல் உதவி ஆய்வாளர் கொலை…
இன்று ரஜினி தர்பார் ரிலீஸ்…
கதை கரு ஒன்றுபடுகிறதோ ?
இப்படி கேள்வி எழுப்புகின்றனர் சமூகத்தளங்களில்! காரணம், கன்னியாகுமரியில் களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு காவல் ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொன்று விட்டு, அருகில் உள்ள மசூதியை நோக்கி தப்பி ஓடிய இரு பயங்கரவாத இயக்கத் தொடர்பாளர்கள் குறித்த செய்தி தமிழகத்தையே உலுக்கி எடுத்திருப்பதுதான்!
இந்தச் செய்தி இன்று செய்தி சேனல்களை உலுக்கி எடுத்திருக்கிறது. காவலர் ஒருவர் இப்படி கண்மூடித் தனமாக சுட்டுக் கொல்லப் பட்டிருப்பது, தமிழக காவல் துறையையே கடும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக இந்தச் சம்பவம் தமிழக அரசை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து உடனடி விசாரணை, உடனடி நடவடிக்கை உறுதி என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி விட்டது தமிழக அரசு.

ரஜினியின் தர்பார் வெளியான அதே நேரத்தில் இந்தக் கதையை முன்னரே ஹிண்ட்ஸ் கொடுத்து, ஹிட் செய்து விட்டுள்ளனர் ஜிஹாதிகள் என்று சமூகத் தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.