திக., திமுக.,வினர் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் தனி ‘ட்ராக்’!

Published:

Nainar Nagendran - 2026

1971ஆம் ஆண்டு சேலம் மாநகரில் தி.க. நடத்திய ஊர்வலத்தில் இந்துக் கடவுள்கள் அவமதிக்கப் பட்டது உண்மை;
திரு. ரஜினிகாந்த் உண்மையை உரைத்தமைக்காக அவருக்கு நன்றி.
அன்று தொட்டு இந்து மதத்தைக் கொச்சைப் படுத்தும் தி க, திமுக-வினர் மன்னிப்புக் கேட்கட்டும். – என்று தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார் பாஜக.,வின் நயினார் நாகேந்திரன்.

முன்னாள் அதிமுக., அமைச்சரும் இந்நாள் பாஜக., துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன், தற்போது ஏற்பட்டுள்ள ஈ.வே.ரா., குறித்த சர்ச்சைக்கு பதிலளித்து தெரிவித்துள்ள கருத்தில்…

அதே நேரம், இந்நாள் அதிமுக.,வினர் குறிப்பாக அமைச்சர்கள் பலவாறு வாய்திறந்து விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். துணை முதல்வர் ஓபிஎஸ்., அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், காமராஜ் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து, ஈ.வே.ரா,வை புகழ்ந்து வருகின்றனர்.

ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம்; அதிமுக பயப்படாது; பெரியார் பற்றி தமிழகத்தில் தவறாக பேசுபவர்கள் வாயை எப்படி மூட வைக்க வேண்டும் என்பது அதிமுக அரசுக்கு தெரியும்; எனவே ரஜினிகாந்த் தனது வாயை மூடி இருப்பது அவருக்கு நல்லது என்று அமைச்சர் ஜெயகுமார் கடுமையான எச்சரிக்கையையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

பெரியார் தான் எங்களின் வழிகாட்டி; அவர் வகுத்து கொடுத்த பாதையில் தான் எங்கள் அதிமுக அரசு பயணிக்கும்; பெரியாரை பற்றி அறியாமல் எதையும் பேசக்கூடாது என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பெரியாரை பற்றி நடிகர் ரஜினிகாந்த் தேவையற்ற கருத்துகளை பேசுவது சரியல்ல. நாடகமாடுவது ஸ்டாலின் தான் என்று குறியிருக்கிறார் அமைச்சர் காமராஜ்.

Related articles

Recent articles

spot_img