தெலங்கானா போலீஸின் நாகினி டான்ஸ் இது…!

Published:

telugu police nagini dance - 2026

தெலங்கானா மாநிலத்தில் போலீஸ் சீருடை அணியாத காவலர்கள் சிலர், நாகினி ஆட்டம் ஆடுகின்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

தெலங்கானா மாநிலத்தில் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட காவலர்கல் ஆறு பேர் மது குடித்துவிட்டு, மணலில் நாகினி போல் வளைந்து நெளிந்து ஆட்டம் போட்டு அதை வீடியோ எடுத்து வெளியிட்டனர். அவர்கள் சீருடை அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இந்நிலையில், கையில் பீர் பாட்டிலுடம் நடனம் ஆடிய காவலர்கள் மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப் பட்டன. மது குடித்தல் உடல் நலனுக்கு தீங்கானது என்று பிரசாரம் செய்ய வேண்டிய போலீஸார், மது அருந்தி ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

https://youtu.be/Yp-C2Yd6Vjo
ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

Related articles

Recent articles

spot_img