ஹையா ஜாலி..! தேர்வு முடிந்து ‘கோடை விடுமுறை’ எப்போ தெரியுமா?!

அடடே... அப்படியா? கல்வி சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
06 July15 plus two student - 2026

இந்த வருடம் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை எப்போது விடப்படுகிறது தெரியுமா? இது குறித்து பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு, தற்போது நடைபெற்று வருகிறது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளும் அடுத்த மாதம் தொடங்கி, ஏப்ரல் 20 ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், தேர்வுகள் நிறைவடையும் ஏப்.20ம் தேதிக்கு மறுநாள், ஏப்ரல் 21ம் தேதி, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. பின்னர், ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.