December 6, 2025, 5:37 AM
24.9 C
Chennai

ஒரே நாடு; ஒரே கார்டு… அமித்ஷாவின் அடுத்த அதிரடி!

amith sha - 2025
New Delhi: BJP President Amit Shah addresses the party’s National Council meet in New Delhi on Saturday. PTI Photo by Shahbaz Khan (PTI8_9_2014_000057B)

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற வகையில் நடவடிக்கை எடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தை அமல்படுத்த தயாராகிவருகிறார். ஏற்கெனவே, அஸ்ஸாமில் குடிமக்கள் பதிவேடு தொடர்பில் தீர்மானமான முடிவினை எடுத்து வரும் அமித் ஷா, இது தேசிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு விரிவு படுத்தப் படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், வங்கிக் கணக்கு என தனித்தனியாக வழங்கப்படும் அடையாள அட்டைகளை ஒருங்கிணைத்து ஒரே பல்நோக்கு அட்டை வழங்குவது குறித்து ஆராயப் படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தேசிய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகங்களுக்கான புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா தில்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியபோது, தற்போது ஆதார், பாஸ்போர்ட், வங்கி கணக்கு, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் என ஒருவருக்கு பல அட்டைகள் வழங்கப்படுகின்றன. ஒரே அட்டையில் இந்த அனைத்து தகவல்களும் இடம் பெற வேண்டும். இதற்கு வாய்ப்பு உள்ளது. இது குறித்து ஆராயப்படுகிறது.

இதற்கு மத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வேண்டும். மக்கள் தொகை கணக்கு எடுப்பு மிகவும் முக்கியமான ஒன்று. அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் மக்கள் நலத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

வரும் 2020 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு 12,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இது 16 மொழிகளில் மேற்கொள்ளப்படும். மேலும் இந்த கணக்கெடுப்பு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உள்ளது. இதற்காக மொபைல் ஆப் உருவாக்கப்படும்.

இனி பேனா பேப்பர் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. தங்களுடைய மொபைல் போனிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பை அதிகாரிகள் மேற்கொள்ள முடியும். ஜம்மு காஷ்மீர் மற்றும் பனி மலை பிரதேசங்களான இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதியை அடிப்படையாக வைத்தும் நாட்டின் மற்ற பகுதிகளில் 2021 மார்ச் ஒன்றாம் தேதியை அடிப்படையாக வைத்தும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கான தகவல்களும் பெறப்படும். அசாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு போன்றது இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு என்றார் அமித் ஷா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories