திசா வன்முறை கொலைவழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்ட சென்னை கேசவலு வீட்டில் சோகம். சென்னகேசவுலுவின் தந்தை மரணம் அடைந்தார்.
சென்ற ஆண்டு டிசம்பர் 26 சாலை விபத்தில் சென்னகேசவுலுவின் தந்தை காயமடைந்தார். பைக்கில் செல்லும்போது இன்னோவா வாகனம் இடித்தது.
நாடெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்திய திசா வன்முறை கொலை வழக்கு குற்றவாளியான என்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் வீட்டில் சோகம். தந்தை திங்களன்று காலமானார்.
சென்ற ஆண்டு டிசம்பர் 26 சாலை விபத்தில் காயமடைந்தார். பைக்கில் செல்லும்போது இன்னோவா வாகனம் அவரை இடித்தது. தீவிர காயங்களோடு குர்மய்யா ஹைதராபாத்தில் சில நாட்கள் சிகிச்சை பெற்றார். சில நாட்களுக்கு முன்பு குடும்ப உறுப்பினர்கள் அவரை சொந்த கிராமம் குடிகுண்ட்லக்கு அழைத்துச் சென்றனர்.
இது இப்படி இருக்க திங்கள் அன்று மதியம் வீட்டிலேயே குர்மையா மரணமடைந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு சென்னகேசவுலுவின் மனைவி ரேணுகா விற்கு பெண் குழந்தை பிறந்தது. மார்ச் 6 ஆம் தேதி மகபூப்நகர் மருத்துவமனையில் அவருக்கு பிரசவம் நடந்தது.
வீட்டில் குழந்தை பிறந்து மூன்று நாட்களுக்குள் சென்னகேசவுலுவின் தந்தை குர்மையா மரணமடைந்த விஷயம் அங்கு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னகேசவலு குற்றவாளியாகி என்கவுண்டரில் இறந்தது, அவருடைய தந்தையும் சாலை விபத்தில் காயமடைந்து இறந்தது… என்று அவர்கள் குடும்பத்தில் சோகத்தின் நிழல் சுற்றிச்சுற்றி வருகிறது. ரேணுகாவின் கணவன் சென்ன கேசவலு திசா வன்முறை கொலை வழக்கில் 2ம் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டார்.
அவருடைய சொந்த கிராமம் நாராயண பேட்டை மாவட்டம் முக்தல் மண்டலம் குடிகுண்ட்ல கிராமம். திசா சம்பவத்தின் போதே ரேணுகா கர்ப்பவதியாக இருந்தார்.
இதனிடையே, ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து சிறிதும் கருணையற்ற வகையில் நான்கு பேர் கொடூரமாக அந்தப் பெண்ணை எரித்துக் கொன்றதற்கு பழிவாங்கும் வகையில், அதே இடத்தில் அதே பாலத்தின் அடியில், அந்த நான்கு பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
இது திசாவின் அடங்காத ஆவியின் பழிவாங்கல் என்று தெலுங்கு மக்கள் பரவலாக பேசிக் கொண்டனர். இப்போது அந்த நால்வரில் ஒருவனான சென்னகேசவலுவின் தந்தைக்கு ஏற்பட்ட மரணமும் அதன் காரணத்தால் ஆதரவற்ற நிலைக்கு குடும்பம் தள்ளப்பட்டதும், திசா ஆவியின் பழிவாங்கல் விளைவே என்று சிலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்தப் பேச்சு மற்ற குற்றவாளிகளின் குடும்பத்தாரிடையே திகில் கிளப்பியுள்ளது.