
ஓட்டல்கள் உணவு கடைகள் அடைப்பு…
அவங்க கூறும் காரணம் விலை ஏறிவிடுமாம்….பாமர மக்களுக்கு…
இந்திய….குறிப்பாக தமிழக ஓட்டல்களில் விலைப்பட்டியல்….பங்கு சந்தைபோல மணிக்கணக்கில் நமக்கே தெரியாமல் ஏற்றமாகவே இருக்கும். (இறங்கவே இறங்காது…அதான் இந்த பதிவு)
சிறிய உணவகங்களில் 5% வரி…
₹40/- ரூபாய்க்கு ஒரு மத்திய தர ஓட்டலில் தோசை சாப்பிட்டா….₹2/- வரி… (பெரிய ஓட்டல் விசயமே பேசவில்லை…45 பைசா பெறுமான மாவை தோசையாக்கி…₹125/-க்கு சாப்பிடுகிற ஆளுகளுங்க தகரியமா போகிற இடத்தில் 18% பெரிய விசயமில்லை)
இவர்கள் போராடுவது நான் கீழே போட்டிருக்கும் படத்தில் உள்ளமாதிரி….வெங்காயம் விலை குறையும் போது எங்கேயாவது விலை குறைச்சு குடுத்து பார்த்திருக்கீர்களா???
இந்த வரி விதிப்பை இவர்கள் கட்ட போவதில்லை …
நாம்தாம் …₹70/- இரண்டு இட்லியை அமைதியாக கேள்வி கேட்காமல் சாப்பிடுகிற நாம்தாம் குடுக்க போகிறோம்…
அது எல்லா உணவக முதலாளிக்கும் தெரியும்
அவர்களின் பயம்….
இவர்களின் கணக்குகள் GST வரி கட்டினால்…. வருமானவரித்துறைக்கு தெரியவரும்…
பஸ்ஸலும், ரயிலிலும் காலையில் ….நசுங்கிட்டும் ……டூவிலரில் உயிரை பணயம் வைத்து ஆபிஸில் வேலை பார்த்து வாழும் நடுத்தர வர்கத்தினர் ….
மார்ச்சு மாசம் சம்பளம் முழுசும் வருமானவரி பிடித்தமாகி நாட்டை காக்க வேண்டும்…
இந்த ஓட்டல் துறை…வரைமுறை இல்லாத விலை வைப்பார்களாம்…ஆனால் வரி என்று வந்தால் மக்கள் பாவமாம்..
அருமையான ஞாயம்…
மறந்து விட்டேன்…
மோடி ஒலிக….
விஜயராகவன் கிருஷ்ணன்..



