ஒட்டுதுணி இல்லாம தலையணை சேலஞ்ச் மாதிரி… முதல்வருக்கு விஸ்கி சேலஞ்ச்!

அடடே... அப்படியா? இந்தியா லைஃப் ஸ்டைல்
payal rajput pillow challange - 2026

தெலங்காணா முதல்வர் கேசிஆருக்கு இயக்குனர் வர்மா விடுத்த விஸ்கி சாலஞ்ச்.

லாக்டௌன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே அடங்கி உள்ளார்கள். சூட்டிங் இல்லாமல் எப்போதும் பிசியாக இருக்கும் சில செலிபிரடிகள் கூட வீட்டில் இருக்கிறார்கள். இவர்களுக்கு பொழுதுபோக்குக்காக ஒருவருக்கொருவர் காப்பி சேலஞ்ச் போன்று வினோதமான சவால்களை விட்டுக் கொள்கிறார்கள்.

100 பட ஹீரோயின் பாயல்ராஜபுத் ‘பில்லோ சேலஞ்ச்’ என்று ஒரு தவையணை மட்டுமே குறுக்கே வைத்துக்கொண்டு போட்டோ ஷூட் செய்து இளைஞர்களின் அறிவை போக்கடித்தார்.

telangana rao and varma - 2026

புதிதாக அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் வங்க சந்தீப் ரெட்டி, வீட்டில் மனைவிகளுக்கு ஆண்கள் உதவி செய்ய வேண்டும் என்று இயக்குனர் ராஜமௌலிக்கு ஒரு சேலஞ்ச் விட்டார். அதை ஏற்று அவர் வீட்டை சுத்தம் செய்யும் வீடியோவை போஸ்ட் செய்தார்.

இப்போது விவாதங்களுக்கு பெயர் போன இயக்குனர் ராம்கோபால் வர்மா ஒரேடியாக தெலங்காணா முதல்வருக்கு வினோதமான சேலஞ்சை விடுத்துள்ளார். கேசிஆர் ஒரு கிளாஸ் விஸ்கியை டிவியில் அனைவருக்கும் தெரியும் படியாக குடிக்க வேண்டும் என்று சவால் செய்துள்ளார்.

மது கிடைக்காமல் குடிமகன்கள் அவஸ்தைப்படும் இந்த நேரத்தில் அவர்கள் முன்பாக விஸ்கி குடித்து அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்று சேலஞ்ச் செய்துள்ளார். அந்த வீடியோவை பார்த்து கரோனா வைரஸ் பற்றி மக்கள் சிறிது நேரம் மறந்து மகிழ்ச்சியாக சிரித்து மகிழ்வார்கள் என்றார் வர்மா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.