
வாழைமரம், தோரணம் கட்டி வாழ்த்துகளுடன்… திருவிழாக் கோலம் பூண…
அடப்பாவிகளா… கோவையில் தொண்டாமுத்தூர் பகுதியில் மது விற்பனைக்கு விழா கோலம் கொண்டுள்ள டாஸ்மாக் கடைகள்! வாழை மரம் கட்டி, மாவிலை தோரணம் கட்டி, ஹோமம் வளர்த்து மதுக்கடைகளைத் திறக்க தயார் நிலையில்… மது கடை எண் 1773..! எதுக்கும் வியாபாரம் நல்லா ஆவணும்ல..!
கொரோனா பயம் இல்லாமே… கொரோனா பரவல் இல்லாமே… எல்லா குடிமகன்களுக்கும் நல்ல வகையில கிக்கு கிடைக்க அருள் புரியணும்னு வேண்டிக்கிட்டு… டாஸ்மாக் கடைய அலங்காரம் செய்து வெச்சிருக்காணுக…!
நாளைக்கு கடை திறக்குமா திறக்காதா என்று ஒத்தையா ரெட்டையா போட்டிட்டிருந்த நிலையில், இப்போது சென்னை உயர் நீதிமன்றமே ஜாலியா தொறந்து செம ஜாலியா இருங்கய்யான்னு பச்சைக் கொடி காட்டிட்டிது.
இந்த நிலையில், நாளை முதல் மதுபானக் கடைகள் தொடங்கும் சூழலில் பாதுகாப்பு விவரங்கள் குறித்தும் அரசு செய்தி வெளியிட்டிருக்கிறது. ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாம்.
ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்… என்றும், கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும் என்றும், கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.
அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்க உத்தரவு.