
கரூரில் பொதுமக்களுக்கு அதிக அளவில் முகக் கவசங்களை வழங்கி, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அறிவுரை வழங்கி வருகின்றனர் போலீஸார். மறுபுறம், பாஜக.,வினரும் முகக் கவசங்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
கரூர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் மாரிமுத்து, தன் பங்குக்கு பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தி முகக் கவசங்களை வழங்கி வருகிறார். ‘கொரோனா’ தொற்று நோய் காலப் பகுதியில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அரசின் ஆணைகளை முறையாக அமல் படுத்தி வருகிறார்.
தேவையற்ற மக்கள் நடமாட்டத்தை இரவு பகல் பாராமல் தீவிரமாக கண்காணித்து கரூர் நகரில் கொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க தம்மாலான அத்தனை முயற்சிகளையும் செய்து வருகிறார் மாரிமுத்து. அத்துடன், தனது சொந்த செலவில் தினமும் நூற்றுக்கணக்கான ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.
இதுவரை 2 ஆயிரம் முகக் கவசங்களை தைத்து மக்களுக்கு வழங்கியுள்ளார். காவலர்களுக்கு முகக் கவசம், கையுறை, ‘கிருமி நாசினி திரவம்’ ஆகியவற்றையும் வழங்கி வருகிறார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆணைக்கிணங்க கரூர் தெற்கு நகர தலைவர் ஜி.இளையராஜா தலைமையில் பொதுமக்களுக்கு 100 முக கவசம் வழங்கப்பட்டது என்றும், இந்த நிகழ்ச்சிக்கு திருமதி நாகமணி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்ததாகவும் பாஜக.,வினர் கூறினர்.