நித்தம் தொடும் உச்சம்; கவலையில் தமிழகம்! இன்று உச்சபட்சமாக 3509 பேருக்கு தொற்று!

Published:

coronaward
coronaward

கொரோனா தொற்றால், ஒரே மாதத்தில் 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தமிழகத்தில்  பாதிக்கப் பட்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பு தமிழகத்தில் 70977 ஆக உள்ளது. 

இன்று 32,543 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது! கொரோனா வைரஸால், தமிழகத்தில் இன்று  3509 பேர் பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.  சென்னையில் மட்டும் இன்று 1834 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 

மக்கள் நெருக்கம் அதிகம் இல்லாத மாவட்டங்களில் திடீரென அதிகரிக்கும் தொற்று கவலை தரும் வகையில் உள்ளது. 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பாக…. மதுரை 203, செங்கல்பட்டு 191, திருவள்ளூர் 170, வேலூர் 168, ராமநாதபுரம் 140, காஞ்சிபுரம் 98, தேனி 68, சேலம் 59, கன்னியாகுமரி 47, விழுப்புரம் 34 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது 

குறிப்பாக  தமிழக அரசு இடையில் திறந்துவிட்ட டாஸ்மாக் மூலமாகவே அதிக நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இன்று தமிழகத்தில் 3509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3509 பேருக்கு கொரோனா உறுதியானது. முதன்முறையாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
covid june a
covid june a

இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 70,000ஐ கடந்துள்ளது.  சென்னையில் மட்டும் இன்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது.  சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,834 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 45 பேர்   உயிர் இழந்துள்ளனர்  அதேநேரம் இன்று ஒரே நாளில் 2,236 பேர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47,650ஆக  உயர்ந்துள்ளது.  இன்று ஒரே நாளில் 45 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா   உயிரிழப்பு எண்ணிக்கை 900ஐ தாண்டியது.  இதுவரை 911 பேர் தமிழகத்தில் குழுவுக்கு உயிரிழந்துள்ளனர்

covid june b
covid june b
covid june c
covid june c
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img