பெண் வேடமிட்டு… பெண்களுடன் நெருக்கமாக இருந்தவனை… வெளுத்தெடுத்த மக்கள்!

அடடே... அப்படியா? இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
man with lady getup - 2026
  • பெண் வேஷம் போட்டு பெண்களோடு நெருக்கமாக இருந்தான்.
  • அடையாளம் கண்டு உதைத்து வெளுத்து வாங்கிய உள்ளூர்வாசிகள்.

பெண் வேஷத்தோடு இருந்த ஆணின் குட்டு வெளிபட்டதால் உள்ளூர்வாசிகள் கையால் செம்மையாக மரியாதை செய்யப்பட்ட சம்பவம் கரீம்நகரில் நடந்துள்ளது.

அவன் ஒரு ஆண். ஆனாலும் புடவை கட்டி ஒரு பெண்ணைப் போலவே அலங்கரித்துக் கொண்டான். அதோடு நிற்காமல் காலனியில் இருக்கும் அனைத்து பெண்களையும் நம்பவைத்து அவர்களோடு சுதந்திரமாக இருக்க முற்பட்டான்.

அவ்வாறு பெண் வேஷத்தில் இருந்த ஆணின் குற்றம் சமீபத்தில் வெளிப்பட்டதால் உள்ளூர்வாசிகளிடம் உதை வாங்கினான்.

கரீம் நகரைச் சேர்ந்த சுமார் 50 வயதுள்ள ஒருவன் கடந்த சில காலமாக புடவை ரவிக்கை அணிந்து காலனியில் உள்ள பெண்களுடன் சுதந்திரமாக இருந்து வந்தான்.

அண்மையில் ஹவுசிங் போர்டு காலனியில், தான் தனியாக இருக்கும் பெண் என்று கூறி ஒரு வீட்டில் வாடகைக்கு வந்தான். ஆனால் சில நாட்களில் பிறகு அவனுடைய நடவடிக்கைகளில் உள்ளூர்வாசிகளுக்கு சந்தேகம் வந்தது. அதனால் அவன் நடவடிக்கை, அவனுடைய அசைவுகளை ஒளிந்திருந்து உள்ளூர்வாசிகள் கண்டறிந்து அவள் பெண் அல்ல என்றும் பெண் வேஷத்தில் இருக்கும் ஆண் என்றும் உணர்ந்தார்கள்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

அதனால் இன்று உள்ளூர்வாசிகள் அவனை வெளியே இழுத்து மரத்தில் கட்டி வைத்து வெளுத்து வாங்கினார்கள்.

ஆனால் அவன் பெண் வேஷத்தில் எதற்காக அலைந்து வந்தான் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒருகாலத்தில் கரீம் நகரில் ஆட்டோ நடத்தியவன் என்று சிலருக்கு சந்தேகம் வந்தது. ஆனால் தான் திருநங்கை இல்லை என்று கூறுகிறான்.

ஏதாவது தவறு செய்துவிட்டு மாறுவேஷத்தில் திரிகிறானா அல்லது ஏதாவது செய்யக் கூடாத காரியம் செய்வதற்காக இந்த வேஷத்தை தேர்ந்தெடுத்தானா என்ற சந்தேகங்களை உள்ளூர்வாசிகள் வெளிப்படுத்தினார்கள்.

இந்த பெண்ணாகிய ஆணை போலீசாருக்கு ஒப்படைத்தார்கள் உள்ளூர்வாசிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.