ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்! பிரியாணி கடையில் குவிந்த கூட்டம்!

அடடே... அப்படியா? தமிழகம் லைஃப் ஸ்டைல்
biriyani

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதில், அங்கு தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியானது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆயினும் மக்கள் பலர், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறி செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதிதாக ஒரு உணவகம் திறக்கப்பட்டது. அங்கு ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்ட மக்கள், எப்படியாவது பிரியாணி வாங்கி விட மாட்டோமா என முகக் கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும், ஒருவரை ஒருவர் முந்தி அடித்து கொண்டு உள்ளே நுழைந்து பிரியாணி வாங்கி சென்றனர்.

இதனால் அங்கு கொரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.