தைவான் நாட்டில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவில் 3வயது சிறுமியை பட்டம் தூக்கிச்சென்ற சம்பவம் காண்போரை பதற வைத்தது.
தைவான் நாட்டில் புகழ் பெற்ற பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது. அந்நாட்டின் நான்லியோ கடற்கரையில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானோர் பட்டமிட்டு மகிழ்ந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டத்தின் வால் சிக்கிய 3 வயது சிறுமி பட்டத்தோடு மேலே பறந்து சென்றது அனைவரையும் அதிர வைத்தது.
காண்போரின் நெஞ்சை அதிர வைத்த இந்த சம்பவத்தில் சிறுமி 100 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார்.
காற்றில் பட்டம் மேலே எழும்ப வாலில் சிக்கிக் கொண்ட சிறுமி அலறிய நிலையிலும், பட்டத்தின் வாலை விடவில்லை.
சிறிது நேரத்தில் காற்றில் அங்கும் இங்குமாக அல்லாடிய காற்றாடி அதிர்ஷ்டவசமாக சிறுமியை கீழே இறக்கியது.