துப்புரவுப் பணியாளர் இல்லை… கழிவறையை சுத்தம் செய்த ஆசிரியை!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
teacher-cleaning-toilet
teacher-cleaning-toilet

தெலங்காணாவில் அரசாங்க பள்ளிக்கூடங்களில் தாற்காலிக துப்புரவுப் பணியாளர்களை (ஸ்காவெஞ்சர்) நீக்கிவிட்டதால் கழிவறைகளை ஒரு பள்ளி ஆசிரியை சுத்தம் செய்ய வேண்டிய நிலைமை சித்திபேட்டை மாவட்டத்தில் ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடி இருந்ததால் கழிவறைகள் எல்லாம் மோசமான நிலையில் உள்ளன.

இந்தப் பின்னணியில் பள்ளிக்கூடங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று மாவட்ட உயர் அதிகாரிகள் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஆணையிட்டார்கள். அதன்படி செர்யால மண்டலம் வீரன்னபேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் பஞ்சாயத்து ஊழியர் வந்து கூட்டிப் பெருக்கினார்.

கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டபோது அது என் வேலையில்லை என்று சென்றுவிட்டார். வேறுவழியின்றி ஆசிரியை பி. வெங்கட்ரமணா தானே தண்ணீர் எடுத்துச் சென்று கழிவறைகளை சுத்தப்படுத்தினார்.

இந்த போட்டோவை அவர் அமைச்சர்கள் கேடிஆர், ஹரிஷ் ராவு, ஈடல ராஜேந்தர், சபீதா ரெட்டி ஆகியோருக்கு ட்விட்டர் மூலம் அனுப்பிவைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.