
மதுரையில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் MLA ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
மதுரை மாவட்டம் மாநகர் பகுதியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை கூட்டம் மதுரை வடக்கு எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முககவசம், சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்பட்டது

தொடர்ந்து எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசியதாவது:
அதிமுக தொடர்ந்து மூன்றாவது முறையாக 2021ல் வெற்றி பெறும் அதிமுகவில் தொண்டர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும் ஆனால் திமுகவிற்கு அப்படி இல்ல திமுக குடும்ப உறுப்பினர்களே அந்த பதவியை வைத்துக் கொண்டு கட்சியை வழி நடத்துவார்கள்
அதிமுக என்பது வெற்றி நோக்கி செல்லும் சிறப்பு ரயில் அதில் தொண்டர்கள் அனைவரும் ஏறிகொண்டால் சிறப்பாக வெற்றி வாகை சூடும் கட்சி நல்ல நிலைமைக்கு கொண்டு சேர்க்கப்படும்
திமுக என்பது முழ்கும் கப்பல் அதில் சென்றால் முழ்க தான் முடியுமே தவிர கரையேற முடியாது
இன்னும் 8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்து விடும் என்கிறார் எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் அது கனவிலும் முடியாது எட்டு மாதத்தில் கட்சியே அழிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது
பொது மக்களின் அடிப்படை தேவைகளை புரிந்து மக்களோடு மக்களாக இருப்பது அதிமுக கட்சியை என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது
திமுக குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்து விடலாம் என திமுக சதித் திட்டங்களை தீட்டி வருகிறது இது ஒருபோதும் நடைபெறாது

திமுக ஆட்சியில் இருந்தபோது 2 முறை மத்திய அரசால் கலைக்கப்பட்ட ஒரு கட்சியாக செயல்பட்டது ஊழல் செய்த கட்சி என்றும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த கட்சி என இரண்டு முறைகள் மத்திய அரசால் கவிழ்க்கப்பட்ட கட்சி தி மு க. அது எவ்வாறு வெற்றி பெற முடியும் என்றார்
தற்போது 3-வது முறையாக 2021ல் அதிமுக வெற்றி பெறப்போகிறது எனவே அதிமுகவில் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையால் கட்சியும் ஆட்சியும் வழி நடத்துவோம் என MLA ராஜன் செல்லப்பா கூறினார்
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை