அயோத்தியில் திருப்பதி பெருமாள் கோயில் கட்ட… யோகியிடம் கோரிக்கை!

அடடே... அப்படியா? ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
thirupathi-temple
thirupathi-temple

அயோத்தியில் ஸ்ரீவாரி ஆலயம் அமைக்க யோகி அரசாங்கத்திற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.

அயோத்தியில் ராமர் மட்டுமல்ல… கலியுக பிரத்யக்ஷ தெய்வமான ஶ்ரீனிவாசன் கூட கொலுவீற்றிருக்கப் போகிறார். அனைத்தும் அனுகூலமானால் ராமர் கோவிலோடு கூட ஸ்ரீவாரி ஆலய நிர்மாணம் கூட தொடங்கப்படப் போகிறது.

அயோத்தியில் ஶ்ரீவாரி ஆலயத்தை நிர்மாணிப்பதற்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்று உபி அரசாங்கத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோரியுள்ளது. இந்த பரிந்துரை குறித்து யோகி அரசாங்கம் கூட அனுகூலமாக இருப்பதாகத் தெரிகிறது.

நாடெங்கும் 49 டிடிடி கட்டுப்பாட்டில் ஆலயங்கள் உள்ளன. தற்போது காசி மற்றும் ஜம்முவில் ஶ்ரீவாரி ஆலயங்களை கட்டுவதற்கு டிடிடி தீர்மானித்துள்ளது. இதற்கு அந்தந்த அரசாங்கங்கள் நிலம் ஒதுக்கியுள்ளன.

ஹிந்து சனாதன தர்மம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி வைபவத்தை உலகெங்கும் பரப்ப வேண்டும் என்று டிடிடி சங்கல்பம் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் ஸ்ரீவாரி ஆலயத்தை நிர்மாணிக்க இருப்பதாக டிடிடி அறிவித்தது.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

திருமலை ஸ்ரீவாரி தரிசனத்திற்கு உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் வருகிறார்கள். மிக நீண்ட தூரத்தில் இருந்து திருமலைக்கு வரும் வட இந்திய பக்தர்களுக்கு எப்போதிலிருந்தோ ஸ்ரீவாரி ஆலயம் தம் இடங்களிலும் கட்டிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.

அவர்களின் கோரிக்கைப்படி டிடிடி வட இந்தியாவில் முக்கியமான இடங்களில் ஶ்ரீவாரி ஆலயங்களின் நிர்மாணம் தொடங்க வேண்டும் என்று நினைத்தது.

இதில் ஒரு பகுதியாக இதுவரையிலேயே ஜம்மு அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியது. டும்மீ, மஜின் அருகில் ஜம்மு அரசாங்கம் நிலம்கூட தீர்மானித்து விட்டது.

இதுவரை டிடிடி சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி, ஈவோ அனில் சிங்கால், இன்ஜினியரிங் அதிகாரிகளின் குழு அந்த இடங்களை பரிசீலித்தது. இனி நிலம் ஒதுக்கும் செயல் முழுமையடைந்தால் விரைவிலேயே ஜம்முவில் ஶ்ரீவாரி ஆலயம் அமைய உள்ளது.

புவனேஸ்வர், விசாகப்பட்டனம், சென்னையில் ஆலய நிர்மாண வேலைகள் நடந்து வருகின்றன. மும்பையில் ஆலய நிர்மாணத்திற்கு 650 கெஜம் நிலத்தை ஒதுக்கி உள்ளது. இங்கு ரூபாய் 30 கோடி செலவில் டிடிடி ஆலய நிர்மாணத்தை தொடங்க உள்ளது.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.