இனி நீ ஐஏஎஸ் அதிகாரி ஆவாய்… உதவி கேட்டு வந்த இளைஞனுக்கு சோனுசூட் அபயம்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
sonu-sood-tweet
sonu-sood-tweet

சார் ப்ளீஸ்… என்று இளைஞனின் வேண்டுதல். தன் கல்விக்காக உதவி செய்ய வேண்டுமென்று ட்வீட்.
உதவி கோரி விண்ணப்பம்.

உதவி செய்வேன் என்று வாக்களித்த சோனு சூட்.

கொரோனா சமயத்தில் ஏழைகளுக்கு உதவி செய்யத் தொடங்கிய சினிமா நடிகர் சோனு சூட் அதன் பிறகு கூட தன் உதவியை தொடர்ந்து செய்துகொண்டு வரும் செய்தி தெரிந்ததே.

உதவி கோரிய உடனே, உனக்கு நான் உள்ளேன், நண்பா! என்று அபயஹஸ்தம் அளிக்கும் சோனு சூட் அண்மையில் மீண்டும் ஒருமுறை தன் நல்ல மனதை வெளிப்படுத்தியுள்ளார்.

சோனு சூட் சார்! ப்ளீஸ்… ப்ளீஸ்… சார்! என் கல்வி படிப்புக்காகத்தான் கேட்கிறேன். என் கிளாசில் நான்தான் டாப்பர். ஆனால் என்னிடம் பணம் இல்லை. தயவு செய்து இந்த கடிதத்தை படியுங்கள். என் படிப்புக்காக உதவி செய்யுங்கள். நான் ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்… என்று கரிமுல்லா என்ற இளைஞன் டுவிட் செய்துள்ளார்.

sonu-sood-tweet2
sonu-sood-tweet2

இதுகுறித்து பதில் அளித்த சோனூசூட், நீ ஐஏஎஸ் அதிகாரி ஆவாய். நான் உதவி செய்வேன்.. என்று டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.