விரைவில் தெலுங்கில் பேசுவேன்: தமிழிசை!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
tamilisai-soundrrajan
tamilisai-soundrrajan

அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தொடர்பு ஏற்படுத்து பவராக இருப்பேன் என்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ராஜ்பவன் ஒரு பாலமாக இருக்கும்படி செய்வேன் என்றும் தெலங்காணா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜ்பவனில் இ-ஆபீசை அவர் தொடங்கி வைத்தார். அப்போது வீடியோ கான்பரென்ஸ் மூலம் மீடியாவோடு பேசிகையில், டிஜிடலைசேஷனில் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ள இ – ஆபீஸ் காகிதங்கள் அற்றதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு எடுத்துவந்த விவசாயச் சட்டத்தை தான் வரவேற்பதாகவும் இது விவசாயிகளுக்கு நன்மை பயப்பது என்றும் கருத்து தெரிவித்தார்.

விரைவிலேயே தான் முழு அளவில் தெலுங்கில் பேசுவேன் என்றும் அதற்கு வேண்டிய முயற்சிகளை செய்து வருகிறேன் என்றும் தமிழிசை கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.