திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன சுவாமி திவ்யானந்த மகராஜ் முக்தி!

அடடே... அப்படியா? சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
ramakrishna-thapovan-divyananda-maharaj
ramakrishna-thapovan-divyananda-maharaj

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் உபதலைவர் சுவாமி திவ்யானந்த மகராஜ் நேற்றிரவு முக்தி அடைந்தார். அவருக்கான அந்திமக் கிரியைகள் இன்று மாலை 3 மணி அளவில் திருப்பராய்த்துறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவாமி திவ்யானந்த மகராஜ் மகா சமாதி அடைந்தது குறித்து அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் இரங்கல் குறிப்பு வெளியிட்டது. அதில்….

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தில் உபதலைவர் தவத்திரு திவ்யானந்த மகராஜ் அவர்கள் மகா சமாதி அடைந்தது குறித்து அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது சங்கத்திற்கு ஸ்வாமிகள் செய்த உதவிகள் அளப்பரியன.சமுதாயத்திற்கு சுவாமிகள் ஆற்றிய தொண்டும் போற்றத்தக்க வகையில் இருந்தது என்பது அனைவரும் அறிந்தது. சுவாமிகளுடைய ஆன்மா நற்கதி அடைய அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் பிரார்த்தித்துக் கொள்கின்றது .சங்கத்தினர் அனைவரும் சங்கத்தைச் சார்ந்த அன்பர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்… என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.