December 6, 2025, 3:10 AM
24.9 C
Chennai

கர்னூலில் துங்கபத்ரா நதி புஷ்கரம் தொடக்கம்!

thugabadra
thugabadra

இன்றிலிருந்து கர்னூலில் துங்கபத்ரா நதி புஷ்கரம் தொடங்குகிறது. இன்றிலிருந்து 12 நாட்கள் தொடர்ந்து துங்கபத்ரா நதியில் புஷ்கரம் நடைபெறுகிறது.

பிரத்தியேக பூஜைகளுடன் விழாவை தொடங்கி வைக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.  கர்னூல் மாவட்டத்தில் துங்கபத்ரா நதி பாயும் 23 ஸ்நான கட்டங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

கொரோனா தாக்கத்தின் பின்னணியில் அதற்குரிய விதிமுறை களை அனுசரித்து ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. ஸ்நான கட்டங்களில் இறங்கி குளிப்பதற்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. ஆயினும் ஷவர்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. இ-டிக்கெட் மூலமாக  பிண்ட பிரதானங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப் படுகிறது.

thungabadra-pushkar
thungabadra-pushkar

பவித்திரமான துங்கபத்திரா புஷ்கரம் இன்று வெள்ளிக்கிழமை வைபவமாக   தொடங்க உள்ளன. மதியபம் 1.21 மணிக்கு புஷ்கரன் துங்கபத்ரா நதியில் பிரவேசிப்பார் என்றும் அப்போதிலிருந்து புண்ணிய மணித்துளிகள் தொடங்கும் என்றும் பண்டிதர்கள் தெரிவித்தார்கள்.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கர்னூலில் உள்ள சங்கல்பாக் ஸ்நான கட்டத்தில் பிரத்தியேக பூஜைகளோடு புஷ்கர ஏற்பாடுகளை தொடங்க உள்ளார். கோவிட் தொற்று காரணமாக  நிலவும் பிரதிகூலமான  சூழ்நிலையில் பக்தர்களின் மன எண்ணங்களுக்கு மதிப்பளித்து ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் சம்பிரதாயமான ரீதியில் சாஸ்திர ரீதியில்  நிர்வகித்து புஷ்கர பண்டிகையை வெற்றிகரமாக்க வேண்டும் என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் புஷ்கர விழாவை வைபவமாக நடத்துவதற்கு அரசு  பிரத்தியேக விதிமுறைகள் படி ஏற்பாடுகள் செய்துள்ளது. ஐந்தாயிரம்  போலீசார் இதற்காக பந்தோபஸ்து ஏற்பாடுகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்நான கட்டங்களின் அருகில் நீச்சல் வீரர்கள்  பிரத்தியேகமாக உதவிக்கு இருப்பார்கள்.

துங்கபத்ரா நதி ஆந்திரப் பிரதேசத்தில் கர்நூல் மாவட்டத்தில் மட்டுமே ஓடுகிறது. கர்நாடகாவில் ஓடிய பின்பு மந்திராலயம் தொகுதி கௌதாளம் மண்டலம் மேளிகனூரில்  ஆந்திராவில் பிரவேசிக்கிறது. 156 கிலோ மீட்டர் தூரம் மந்த்ராலயம்,  நிம்மிகனூரு,  கோடுமூரு, கர்னூலு,   நந்திகொட்கூரு  தொகுதி களில் பிரவகித்த பின் கொத்தப்பல்லி மண்டலம் சங்கமேஸ்வரத்தில் கிருஷ்ணா நதியில் கலக்கிறது.

நதிப் பிரவாஹ பிரதேசங்களில்  23 புஷ்கர குளியல் துறைகளை அரசாங்கம் அமைத்துள்ளது. குளியல் துறைகளில் பக்தர்களுக்கு எப்படிப்பட்ட தொந்தரவும் இல்லாமல் அனைத்து சௌகரியங் களையும் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ஏற்படுத்தப் பட்ட ஷவர்களின் கீழ் பக்தர்களுக்கு நிற்க அனுமதி உள்ளது.

காலை ஆறு மணியிலிருந்து மாலை 6 மணி வரை புஷ்கரத்திற்கு  வர அனுமதி உள்ளது. கர்னூல் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் இருந்து புஷ்கர கட்டங்கள் வரை 43 பஸ்களை ஆர்டிசி ஏற்பாடு செய்துள்ளது. துறைகளின் அருகில் தாற்காலிக பஸ் ஷெல்டர்களை ஏற்பாடு செய்துள்ளது. 

thugabatra-pushkara
thugabatra-pushkara

துங்கபத்ரா நதியில் தற்போது 5 ஆயிரம் கியூசெக் நீர் ஓடுகிறது. புஷ்கர சமயத்தில்  தண்ணீர் பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்வதற்கு அதிகமாக தினமும் மூவாயிரம் கியூசெக் அளவில் துங்கபத்ரா அணையிலிருந்து தண்ணீரை விடுவதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆனால் கோவிட் தாக்கம்  தீவிரமாக இருப்பதால் நிபுணர்கள் எச்சரிக்கையின்படி அரசாங்கம் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுத்துள்ளது. பக்தர்கள் நதியில் இறங்கி புஷ்கர ஸ்நானம் செய்வதற்கு அனுமதி மறுத்துள்ளது.

ஆனால் நீத்தார் கடன் தீர்க்கும் பிண்டப் பிரதானங்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. ஈ டிக்கெட் புக் செய்து கொண்டவர் களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. வெப்சைட் மூலம் பக்தர்கள்  தமக்கு விருப்பமான புஷ்கர கட்டத்தில் புக் செய்து கொள்ளலாம். சம்பிரதாய பூஜைகளுக்கும் பிண்ட பிரதானங்களுக்கும் 23 கட்டங்களில் 350 புரோகிதர்களை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு புரோகிதரும் ஒரு நாளைக்கு 16 பூஜைகள் செய்வார்கள். புக் செய்யாமல் நேராக வந்தால் பிண்ட பிரதானத்திற்கு  அனுமதி அளிக்க மாட்டார்கள்.

கிருஷ்ணா, கோதாவரி புஷ்கரங்களில் ஏற்பாடு செய்தபடியே இப்போதுகூட புஷ்கரம் நடக்கும் 12 நாட்களும் அனைத்து ஸ்நான கட்டங்களிலும் கங்கா ஆரத்தி அளிக்க உள்ளார்கள்.

முதல்வர் பயணம் தொடர்பாக சங்கல்பாக் விஐபி புஷ்கரத்  துறையில்  ஏற்பாடுகளை  அமைச்சர்கள் புக்கன, ஜெயராம், எம்எல்ஏக்கள் ஹபீஜ்கான்,  கோட்டசானி, சுதாகர் ஆகியோர் பரிசீலித்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories