
ஆந்திராவில் கோவில் விக்ரகங்கள் சேதப்படுத்துவதன் பின்னால் பெரிய சதித் திட்டம் உள்ளது என்று சினிமா நடிகர் சுமன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் ஹிந்து கோவில் விக்கிரகங்களின் தாக்குதல் குறித்து பிரபல நடிகர் சுமன் பரபரப்பு விமர்சனம் செய்துள்ளார்.
ஆந்திராவில் தீவிரமான பரபரப்பை ஏற்படுத்திவரும் ஹிந்து தெய்வ விக்கிரகங்களின் சிதைப்பு சம்பவம் குறித்து பிரபல சினிமா நடிகர் சுமன் பரபரப்பு வியாக்கியானம் செய்துள்ளார்.
ஞாயிறன்று திருமலையில் ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமியை தரிசித்துக் கொண்ட பின்பு ஹீரோ சுமன் மீடியாவோடு பேசுகையில் ஆந்திராவில் கோவில் சிலைகள் துவம்சத்தின் பின்னால் பெரிய சதி திட்டம் உள்ளது என்று தான் நம்புவதாக கூறினார்.
ஜெகன்மோகன் ரெட்டியின் அரசாங்கத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இவ்வாறு சதித் திட்டம் தீட்டி இருக்கும் என்று தான் சந்தேகப்படுவதாக கூறினார். பிறர் கூட இந்த சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
எது எப்படி ஆனாலும் கடவுள் விஷயத்தில் தவறு செய்தவர்களுக்கு கட்டாயமாக அந்த கடவுளே தண்டனை விதிப்பார் என்று சுமன் அபிப்பிராயம் தெரிவித்தார்.
கோவில்கள் மசூதிகள் சர்ச்சுகளின் பாதுகாப்புக்கும் அவற்றை கவனித்துக் கொள்வதற்கும் சிசிடிவி கேமராக்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆந்திர பிரதேஷ் அரசாங்கத்திற்கு சுமன் வேண்டுகோள் விடுத்தார்.
ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல், விக்ரகங்களை சிதைப்பது போன்றவற்றில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கடினமாக தண்டனை அளிக்க வேண்டும் என்று பிரதமரை கோருவதாக கூறினார்.
அதேபோல் விக்ரகங்களை சேதப்படுத்தியது யார் என்ற தெளிவுக்கு வராமல் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல என்று சுமன் கூறினார். முதல்வர் ஜெகனுக்கு கெட்ட பெயர் எடுத்து வருவதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் அந்த விக்ரகங்களை சேதப்படுத்தி இருக்கலாம் என்று அவர் குற்றம் சுமத்தினார். குற்றவாளிகளை அடையாளம் காணாமல் ஒருவர் மீது ஒருவர் இவ்வாறு நிந்தித்துக் கொள்வது சரியான வழிமுறை அல்ல என்று கூறினார்.
அதேபோல் ஹிந்துக்களின் மனநிலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு முதல்வர் ஜெகன் ஆலயங்களின் பாதுகாப்பிற்கு பிரத்தியேக நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கோவில் விக்ரகங்களை சிதைத்தவர்கள் கட்டாயமாக தண்டனை அனுபவிப்பார்கள் என்றார்.
இனி சினிமாக்கள் குறித்து பேசுகையில் இப்போதுதான் சூட்டிங்குகள் தொடங்கி வருகின்றன என்றும் தியேட்டர்கள் முழு அளவில் திறப்பதற்கு இன்னும் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் ஆகலாம் என்றும் அபிப்பிராயம் கூறினார்.
விரைவிலேயே சினிமா தொழிற்சாலைக்கு நல்ல நாட்கள் வரும் என்று ஆசைப்படுவதாகவும் கூறினார். நல்ல காலம் பிறக்கும் என்று அவர் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.