
கணவனை ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்ற மனைவி.
பணத்தின் மீது பேராசை கொண்ட ஒரு பெண் தன் கணவனை மற்றொரு பெண்ணிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு விற்ற கதையை சுப லக்னம் சினிமாவில் பார்த்தோம். இப்படிப்பட்ட ஒரு யதார்த்த சம்பவமே மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் நடந்து உள்ளது. ஆனால் கதை சிறிது மாற்றம்.
தன் கணவன் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டு தன்னையும் தன் குழந்தைகளையும் கண்டுகொள்ளாமல் விட்டதால் அந்தப் பெண்மணியிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் கொடுக்கும்படி வற்புறுத்தியுள்ளார் மனைவி.
இந்த வழக்கு தொடர்பாக… ஒரு சிறுமி தன் தந்தை தன்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணோடு தொடர்பு கொண்டார் என்றும் தம்மோடு காரணம் இல்லாமல் வீட்டில் சண்டையிட்டு வருவதாகவும் அதனால் அமைதி இல்லாமல் போய்விட்டது என்றும் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த தகராறில் வீட்டில் தானும் தன் தங்கையும் படிப்பின் மீது கவனம் செலுத்த முடியாமல் போவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகார் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் அந்த தம்பதிகள் இருவரையும் கவுன்சிலிங் சென்டருக்கு அனுப்பியது. அந்த மனிதர் தன் மனைவியோடு இல்லாமல், தன் காதலியோடு இருக்கவே விருப்பப்படுவதாகவும் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறுவதாகவும் கூறிவிட்டார். ஆனால் அதற்கு மனைவி சம்மதிக்கவில்லை.
தன்னுடைய கணவரை அந்தப் பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் தன் கணவனின் காதலி தனக்கு ஒன்றரை கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அப்போதுதான் தன் கணவனை விட்டுக் கொடுப்பேன் என்று தெளிவாகக் கூறிவிட்டார்.
இந்த டீல் ஓகே என்று சொன்ன கணவனின் காதலி தன்னுடைய விலை மதிப்பான அப்பார்ட்மென்டோடு கூட 27 லட்சம் ரூ பணத்தையும் முதல் மனைவிக்குக் கொடுத்தார்.
ஆனால் திருமணமாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு பெண்ணின் மயக்கத்தில் விழுந்து தன்னை வேண்டாம் என்று தீர்மானித்த கணவனோடு சேர்ந்து வாழ்வதில் பொருளில்லை என்றும் தன் இரு மகள்களின் எதிர்காலத்தை முன்னிட்டு அந்தப் பணத்தை வற்புறுத்தியதாகவும் அந்த பெண்மணி தெரிவித்தார்.